பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பிறப்போர் வளர்வோர்; இருப்போர்; இறப் போர். - இதை உணர்ந்தோம். ஆகவே வசையொழிய வாழ்வோம். நல்லது. இது போதுமா? பதி: நீங்களே கண்டுகொள்ளுங்கள்! நான் வழிகாட்டுகிறேன். எதிரே மேசை பக்கத்திலே நூலடுக்கு. அதோ அவ்வண்டியின் பின்பளு. இதோ இவ்வண்டியின் முன்பளு. அதோ வேலியில் செடி. இதோ தோட் டத்தில் பழமரம். அவை வசை ஒழிய இருப்பவை. அவையோ நாமும்? அவற்றைப்போல் இருந்தால் போதுமா? நாம் அவையல்ல. அவற்றைப்போல் இருத் தல் ஆகாது. ஆக்கத் தெரிந்தவர்க்கே பயன் பட்டு, மற்றவர்க்கு உதவாது நின்றுவிடக் கூடாது. இப்படி உங்கள் மனம் குசு குசு வென்று உரைக் கிறதா? ஏன்? நாம் மக்கள். மக்கள் இயல்பு வேறு. பிற உயிர்கள், பொருள்களின் இயல்பு வேறு. நம் இயல்பிற்கு எது ஊதியம்? எது நிறைவைத் தரும்? மெய்யான நிறைவைத் தரும்? ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. இது நெஇந்தொலைவிலிருந்து கேட்கிறதா? இது பொய்யாமொழி: பொதுமொழி: எக்காலும் பொய் யாப் பொதுமொழி. -