பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.3 எது ஈதல்? சற்று ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். 'அம்மா பிச்சை' என்று கேட்டு வந்தார் ஒருவர். ஐந்து காசு கொடுத்தாய். ஐயா! அறநிலையத் திருப்பணி என்று அறி வித்துக்கொண்டு வந்தார் பெரியவர். பொற்குவை தந்தாய். இவை ஈதல் என்று நினைக்கிருய், அப்படித் இவை ஈதலின் தளிர் ஒரு சிறு பகுதி முழு உருவம் அல்ல. நாடி வந்தவர்களுக்குக் கொடுப்பது நல்லதே. அதைவிடச் சிறந்தது தேடிச் சென்று கொடுப்பது. வறுமை பொருளுக்கு மட்டுமன்று. அறிவிலும் வறுமைப்படுவதுண்டு. அறிவையும் இரத்தலுண்டு. விளங்குகிறதா? மேலும் சிந்திப்போம். நல்லுணர்ச்சிக்கும் வறுமை ஏற்படும், அன்புணர்ச்சிக்கும் வறுமை வரும். ஆகவே அன்புணர்ச்சியையும் ஈயக் கற்றுக் கொள் வோம். அருளுணர்ச்சியையும் ஈயக் கற்றுக் கொள் வோம். மேலும் கவனிப்போம். நீங்களும் நானும் கொடுக்கக் கூடிய காசுகளை விட, பொற்குவியல்களைவிட விலையுயர்ந்தது அறிவு. நல்லறிவு. நம் அறிவு குறைவாயிருக்கிறதா? நிரப்பிக் கொள்ள உலகம் அழைக்கிறது. அறிவு எங்கே முளைத்தாலும், வளர்ந்தாலும், அது அகிலம்