பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கும் போக்கும் என்னருமைத் தம்பி, தங்காய்! நீங்களும் நானும் பிறந்தபோது இருந்த நிலை என்ன?_இன்று இருக்கும் நிலை என்ன்? முதலில் உடல் நிலையை-பருவ நிலையைக் கவனிப்போம். பிறந்தபோது ஆறு பவுண்டு, ஏழு பவுண்டு அல்லது எட்டு பவுண்டு எடையுள்ள குழந்தையாக இருந்தோம். இன்று அதே எடையில் யாராவது இருக்கிருேமா? இல்லை. யாருமே இல்லை. எல்லோ ருமே பலமடங்கு பளுவாகி விட்டோம். ஆறு பவுண்டு குழந்தை, பதினறுபவுண்டு குழந்தையாகி, இருபத்தாறு பவுண்டு குழந்தையும்ாகி அறுபது பவுண்டு சிறுவனகி, நூற்றறுபது பவுண்டு காளை யாவது இயற்கை. அதுவே முறை. அதுவே எதிர் பார்க்க வேண்டியது. இம் மாற்றம்-வளர்ச்சி உயர்வு-நல்லது; தேவையானது; உயிர்ப்பின் அறிகுறி. பிறந்தபோது இருந்த உயரம் வேறு. சிறுவனக இருந்த உயரம் வேறு. இளைஞனுக இருந்த உயர்ம் வேறு. மனிதனுக இருக்கப் போகும் உயரம் வேறு. இம் மாற்றம்-வளர்ச்சி-உயர்வு-தவரு? கெடுதலா? தேவையற்றதா? நோயின் அறிகுறியர்? அஞ்சவேண்டியதா? வெறுக்கவேண்டியதர்? பச்சைக் குழந்தையாக இருந்தபோது பல்லெல் லாம் போன தள்ளாத பர்ட்டிகூடத் தூக்கவும் ஆட்டவும்கூடிய அளவு இலேசாக இருந்தானே; இன்று பெற்றெடுத்த என்னலேயே துர்க்க முடிய வில்லையே? இப்படியா பருத்துப் போவது என்று எந்தத் தாயாவது ஏங்குவது உண்டா? தந்தைதான் ஏங்குவதுண்டா? தாயும் தந்தையும் அவாவுவது என்ன? குழந்தை குழந்தையாகவே இருக்கவல்ல. குழந்தை குமரனுக