பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S 4 வேண்டும். காளை தலைவகை வேண்டும் என்று பெற்ருேரோ வேறு நல்லோரோ விரும்புவது தவரு? கோளாரு? அதர்மமா? அரை மீட்டர் துணியில் ஒரு சொக்காய் தைத்துப் போட்டுவிட்டேன் அன்று. இன்ருே கால்சட்டை, மேல்சட்டை தே ைவ யா கி றது. இரண்டிற்கும் சேர்த்து ஆறு மீட்டர் தேவை! எங்கே போவது இவ்வளவு துணிக்கு? ஏனே வளர்ந்தான் இப் பர்விமகன்?’ என்று அங்கலாய்க்கிற அன்னையைக் கண்டதுண்டோ? அப்பனையாவது கண்டதுண்டோ தம்பி! அரை மூடியோடு அலைந்து கொண்டிருந்தால் எவ்வளவு நன்ருயிருக்கும். சேலை, ரவிக்கை தேடும் நிலைக்கா மளமளவென்று வளர்ந்து விடுவது' என்று பல்லுதிர்ந்த பாட்டிகூடச் சலித்துக் கொள்வதில்லை. ஏன்? எடை கூடுதலும், உயர வளர்ச்சியும் இயற்கை; தேவை: உயிர்ப்பு என்பது பாட்டிக்குத் தெரியும். தாத்தாவிற்குத் தெரியும். அம்மைக்குத் தெரியும். அப்பனுக்குத் தெரியும். அனைவருக்கும் தெரியும். எடை கூடுதல் தமக்குச் சுமை என்பதும் தெரியும். உயர்ந்து வளருதல் அதிகச் செலவு என்பதும் தெரியும். சுமைக்கு அஞ்சி, செலவிற்கு அஞ்சி, பிறந்த குழந்தை பிறந்த எடையோடு, பிறந்த அளவோடு தேங்க வேண்டுமென்று கருதுவதில்லை; உபதேசஞ் செய்வதில்லை. தேங்கச் செயல்புரிவ தில்லை. வளர்ச்சி, பருத்தல் நோக்காக அமைகிறது: முறையான நோக்காக அமைகிறது; என்ன விலை கொடுத்தும் பெறவேண்டிய நன்னேக்காக அமை கிறது.