பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கோடிகோடி மக்களைக் கொண்டது. நம் நாடோ ஐம்பது கோடி பேரை-மன்னிக்கவும், மணித் துளிக்கு மணித்துளி மேலும் வளரும் எண்ணிக் கையினரைக் கொண்டது. அத்தனை பேரும் வளர்ந் தால் மட்டுமே நாடு வளர்ந்ததாகப் பொருள். உன்னுடன் பிறந்த ஐவருள் மூத்த அண்ணன் மட்டும் வளர்ந்துவிட்டு, மற்றவரெல்லாம்-நீயும் சேர்ந்து-தேய்ந்து விட்டால் உன் குடும்பம் வளமாக வளர்ந்துள்ள குடும்பம் என்று பெருமை கொள்ள முடியுமா? அடுத்த வீட்டு ஐவருள், அனை வரும் உன் அண்ணன் அளவு இல்லாவிட்டாலும், பெரிதும் வளர்ந்து பருத்து விட்டனர் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்போது எந்த வீட்டுக்குச் சிறப்பு? உன் வீட்டிற்கா, அடுத்த வீட்டிற்கா? சிந்தித்துப் பாருங்கள் இளைஞர்களே! அஞ்சாது சிந்தித்துப் பாருங்கள் மங்கா மணிகளே! அண்ணன் எவ்வளவு அறிவாளியானலும், வல்ல வைைலும், நல்லவனுலுைம்-செழுங்கிளை தாங்கு பவைைலும் அவன் ஒருவனே மட்டும் வளர்ப்பதற் காக வீட்டிலுள்ள மற்றத் தம்பி தங்கையர் ஐவரை யும் தேயவிடுவது, தேங்க விடுவது, தியாகஞ்செய்து விடுவது துரோகமல்லவா? அறிவறிந்த ஆண்மை யாளன் அதற்கு உடன்படுவான? அறிவறிந்த பெண்மைதான் அதற்கு தலையாட்டுமா? - இங்கும் அங்கும் இழுத்துப் பிடித்து, இதிலும் அதிலும் மிச்சப்படுத்தி, இதையும் அதையும் அதிக மாக்கி பெற்றெடுத்த அனைவரையும் கிட்டத்தட்ட ஒரளவு வளர்த்தல் பெற்ருேளின் கடமை. அதுவே அவர்கள் நோக்கு. தம் அளவே தம் மக்களை வளர்த்தல், அவர்கள் நோக்கமாகவே இருக்கிறதா? இருக்கலாமா? நாலேகால் அடி தாய், தன்மகனும், மகனுக்கு மகனும், வாழையடி வாழையாக நாலேகால் அடி