பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S 8 நன்நோக்கு; இயற்கை நோக்கு: சீரிய முறை: நல்லறம்; உயர்வு உள்ளல். இதை, உயர்வு உள்ளலே-நீங்களும் நானும் நம்வரையில், நம் குடும்பங்கள் வரையில், மேற் கொண்டால் போதுமா? நாட்டைப் பொறுத்தும், நமக்கு வளர்ச்சி நோக்கு, உயர்வு நோக்கு ஏற்பட வேண்டாவா? வளர்ச்சி நோக்கு வந்தால், நம் துய்ப் புக்களைக் கட்டுப்படுத்த வேண்டி வருமே _ என்று அஞ்சி மற்றவர்கள் எப்படியோ நாசமாகப் போகட் டும் என்ற சலிப்பு நோக்கை ஏற்கலாமா? ஒருவருக் காகப் பலரைப் பலியிடும் கசாப்புக்கடைப் போக்கை ஏற்கலாமா? இந்தியாவைப் பெற்ருேம். வரலாற்றில் முன்ன்ர் காணுத அளவு இணைந்த இந்தியாவைப் பெற்ருேம். உரிமை பெற்ற இந்தியாவைப் பெற்ருேம். குடியாட்சி இந்தியாவைப் பெற்ருேம். பிறப்புபற்றியன்றி,தகுதி பற்றி, யாரும் எந்நிலைக்கும் உயர்வதற்கு வாய்ப்பளிக்கும் சம உரிமை இந்தியா வைப் பெற்ருேம். அந்த இந்தியா, பிறந்த மேனியாக இருக்க விரும்புவதா? தொன்மையைக் காட்டி அதன் தன்மையைத் தேய்க்கலாமா? தன்னலத்திற்குதன் சுகபோகங்களுக்கு வரம்புகட்டப்படுமோ என்று அஞ்சி, அதன் வளர்ச்சிக்குத் தடையாகலாமா? நாட்டை வளர்ப்போமென்று நமக்கு வேண்டிய நாலுபேர்களை மட்டும் வளர்த்துக் கொள்ளச் சொற் சிலம்பம் ஆடலாமா? பெற்ருேரைப் போல, சம உரிமைக் குடியாட்சி இந்தியாவைப் பெற்ற நாமும், இந்தியா முழுவதும் iெளர, இந்தியர் அனைவரும் வளர எண்ணவேண் டாவா? நன்ருக வாழ்வோம், ஒன்ருக வாழ்வோம் வாரீர்.