பக்கம்:எழிலோவியம்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

3

எண்ணெயை யுண்டாய் சின்னாள்¡
எரிப்புகை யுண்டாய் சின்னாள்¡
கண்பறி மின்னுண் டின்றோ
களிக்கின்றாய் ! காலம் போல
வண்ணத்தில், உருவில் மாற்றம்
ஏற்றனை ! ஆனால், மக்கள்
எண்ணத்தில், செயலில் மாற்றம்
எனில்,சீறி எதிர்க்கின் றாரே !

4


குணம்கல்வி ஒழுக்கம் மிக்க
குலக்கொடி யானை மக்கள்
மனைவிளக் கென்பார் ! அந்த
மாப்புகழ் உனக்கும் உண்டே !
மணவினை முடித்து வைப்பாய் !
மாநகர்க் கொளியும் சேர்ப்பாய் !
துணைபோவாய் இருளில்!மற்றும்
தூங்காது விழிப்பாய் நீயே !
            

5


கொம்பினைக் கடைந்து செய்த
குளிர்நிறை கட்டில் மீது
வம்பளந் திருப்பார் காதல்
மணமக்கள் ! அவர்கள் பேச்சைக்
கம்மலாய் எரிந்து கேட்டுக்
காதோடே வைத்தி ருப்பாய் !
இம்மியும் வெளிவி டாய்நீ !
ஈதன்றோ மேலோர் செய்கை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/47&oldid=1302797" இலிருந்து மீள்விக்கப்பட்டது