இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
9
தாமரை மொட்டே மார்பு !
தடந்தோளோ பசுமை மூங்கில் !
மாமரத் தளிரில் வண்டு
சிந்திய தாது போர்த்த
காமர்செய் மேனி ! கூந்தல்
காராகும் ! இடையோ வல்லி !
காமநூல் விரிவுக் கேற்ற
கருத்துரை விளக்கம் மங்கை !
10
மங்கிய விளக்கு முன்பு
வாழ்ந்ததை நினைத்தல் போல
மங்கையாய்க் காவல் வீட்டில்
வாழ்ந்திட்ட போது நெஞ்சில்
தங்கிய காதல் எண்ணம்
தலைகாட்ட உள்ளுக் குள்ளே
பொங்குவாள் கிழவி ! வீட்டுப்
புதுப்பெண்ணைப் பார்ப்பாள் அந்தோ !
--------