பக்கம்:எழில் உதயம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 எழில் உதயம்

காலால் வலம் வந்து கண்ணுல் தரிசித்துக் காயத்தினுல் ஆகும் வழிபாடுகளைச் செய்யலாம். ஆனல் இவற்றிற் கெல்லாம் இறுதியில் இருப்பது எம்பெருமாட்டியின் சரணுரவிந்தங்களில் நம் தலையைத் தாழ்த்தி வணங்கு வதுதான்.

கையால் கும்பிடுவதும் தலையால் வணங்குவதும் வழிபாட்டு வகைகளே. ஆனால் சாஷ்டாங்கமாக, தண்டா காரமாக, அடியில் வீழ்வதுதான் சரணுகதி, உயிரற்ற தடி நிறுத்தினுல் கீழே விழுந்துவிடும். அது போலக் கர்த்திருத் துவ மனுேபாவத்தை அடியோடு ஒழித்து, உன் சரணல்லால் சரணில்லை என்று அடைக்கலம் புகுவதையே அந்த நிலை காட்டுகிறது. பொதுநூல் கூறவந்த திருவள்ளுவர், தலையைப் படைத்த பயன் இறைவன் தாளில் விழுந்து வணங்குவதுதான் என்பதை எதிர்மறை முகத்தால் கூறி யிருக்கிருர்,

“கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை' .

என்பது திருக்குறள்.

ஆகையால் அன்னையின் திருவடித் தாமரையை வணங்குவதே காயத்தால் பெற்ற பயன், இதை ஆசிரியர் சொல்கிரு.ர்.

என்றும் வணங்குவது உன் மலர்த்தாள்.

மூன்று கரணங்களில் மனத்தையும் உடம்பையும் சொன்னர். ஆனல் வாக்காகிய கரணத்தினல் செய்யும் வழிபாட்டை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆயி னும் அதனையும் செய்பவர் இவ்வாசிரியர் என்பதை நாம் உணர வழி உண்டு. இந்தப் பாடல்களைப் பாடியிருப்பதே வாக்கினல் செய்த தொண்டு அல்லவா? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/104&oldid=546261" இலிருந்து மீள்விக்கப்பட்டது