பக்கம்:எழில் உதயம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. எழில் உதயம்

ஆசாரங்களே மேற்கொண்டு உண்ணத்தகாததை உண்டு மதிமயங்கி அலைகிருர்’ என்ருர்கள். அவர்கள் ஏசுவதைக் காதில் வாங்காமல் அபிராமி யம்பிகையை நாள்தோறும் தரிசித்துத் தியானம் செய்து, உள்ளத்தே விளைந்த கள்ளால் உண்டான களியிலே பெருமிதத்தோடு மிதந்து வந்தார்

அ1ெ .

சரபோஜி மன்னர் அவரை அபிராமி சந்நிதியில் கண்ட போது அவர் அம்பிகையின் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். சந்திரமண்டலத்தில் அமுதமயமாய் வீற்றிருக்கும் திரிபுர சுந்தரியைத் தம்முள்ளே தரிசித்து, அங்கே சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்ற அப்பெருமாட்டியின் திருக் கோலத்தில் ஆழ்ந்திருந்தார். கண்ணே விழித்தபோது அரசர் ஏதோ கேள்வி கேட்கவும், அவருக்குப் பெளர்ணமி தான் சொல்லில் வந்தது. அவர் ஒளிமயமான காட்சியி: விருந்து இறங்கினவர் அல்லவா?

வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது அவருக்கு உலக உணர்வு தெளிவாக வந்தது. தாம் தவருகப் பெளர்ணமி என்று சொல்லிவிட்டதை அறிந்தார். தம்மைக் குறை கூறுவார்க்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு பலமாக ஏற்பட்டதைத் தெரிந்து கொண்டார். கேள்வி கேட்டவர் மன்னர் என்பதையும் நினைந்து பார்த்தார். .

வீட்டை அடைந்தவுடன் அவர் மனம் சற்றே குழம்பியது. அம்பிகையின் சந்நிதியில் அப்படி வந்தது வார்த்தை, அவள்தான் அப்படிப் பேசச் செய்து விட்டாள். நன்றே வரினும் திதே வருகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை என்று தெளிவு பெற்ருர், உடனே அபிராமியம்மை யைப் பாடத் தொடங்கினர். மனம் கனிந்து உருகித் தமிழில் பக்தி மணக்கும் செய்யுட்களைப் பாடும் பழக்கம் அவருக்கு இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/12&oldid=546169" இலிருந்து மீள்விக்கப்பட்டது