பக்கம்:எழில் உதயம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 எழில் உதயம்

விந்தங்களையும் கண்டு பக்தி உணர்ச்சி பெருகக் கசிந்து வணங்கினர் இந்தப் பக்தர்.

கசிந்து பக்தி - பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில்.

இது காயத்தின் செயல். இங்கும் வாக்கும் மனமும் தொழிற்பட்டாலும் உடம்புக்கு வேலை அதிகம். கோயில் உள்ள இடத்தை நாடிச் செல்வதும் உள்ளே நுழை வதும் அன்னையின் திருக்காட்சியைக் காணுவதும் வணங்கி எழுவதுமாக உடம்பால் செய்யும் பக்திச் செயல்கள் பல படியாக நிற்கின்றன. இப்படியெல்லாம் விழுந்து சேவித்த பிறகே அன்னேயின் நாமத்தைக் கற்கும் நிலை வந்தது. அதன் விளைவே அவள் புகழைக் கண்ணும் நிலை.

எம்பெருமாட்டியின் புகழையே எண்ணிப் பிற எண்ண மின்றி உள்ளத்தே ஆனந்தம் பொங்க நிற்கும் நிலை கனியை ஒத்தது. கணிக்கு முந்தியது காய், தேவியின் நாமங்களைப் பாராயணம் செய்து கற்பது காய் நிலை, காய்க்கு முந்தியது பூ, அவளுடைய திருக்கோயிலை நாடி உடம்பால் தொண்டு செய்து அவள் அடிவீழ்வது பூவின் நிலை.

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம்; - கசிந்து பத்தி பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில்.

இவ்வளவுதான இன்னும் இதற்குமுன் ஒன்று உண்டு. பூவுக்கு முன்நிலையில் இருப்பது அரும்பு. இறைவி யின் கோயிலுக்குச் சென்று அவளைப் பக்தியுடன் கசிந்து வணங்குவது எளிய செயல்அன்று. அதற்குமுன் செய்த செயல் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/126&oldid=546283" இலிருந்து மீள்விக்கப்பட்டது