பக்கம்:எழில் உதயம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய்த புண்ணியம் 1.1%

தனி மனிதன் தன் உள்ளத்தை நல்வழியிற் செல்லும் படி செய்வது, பல முறை முயற்சி செய்தபின் விளை யும் விளைவு. பல பெரியோர்களுடன் சேர்ந்து நல்ல பழக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அன்பர் களின் கூட்டத்திலே கலந்து கொண்டால் நம்மை அறியாமலே அவர்களுடைய பழக்க வழக்கங்கள் நம்மிடத்திலும் உண்டாகும். அறிவினல் ஆராயாமலே அந்தப் பழக்கங்கள் மெல்ல மெல்ல நமக்கும் வரும். தனியாக இருப்பவன் அத்தகைய நல்ல பழக்கத்தை மேற் கொள்ள நினைத்தால் சோம்பல் முன் வந்து தடுக்கும்; அறிவு அதைச் செய்யாமல் இருப்பதற்குரிய சமாதானங் களைத் தேடும். ஆளுல் சத்சங்கத்தில் சேர்ந்துவிட்டால் நல்ல பழக்கம் தானே அவனைச் சாரும், எந்தப் பழக்க மும்-தீயதானலும் நல்லதானலும்-சங்கத்தினுல் எளி திலே படிந்துவிடும்.

பக்தி பண்ணுவதும் அம்பிகையை வணங்குவதும் நாமாக முயன்று பழகிக்கொள்ள முயன்ருல் அமைவது அருமை. தொண்டர்களோடு கூடி நின்ருல் அவை நம்மிடம் சார்ந்து படிந்து விடும். நிலத்தின் இயல்பினல் நீருக்கு நிறமும் சுவையும் வருவதுபோல், சார்ந்த இனத் தின் இயல்பினல் நமக்கு அவர்களின் பழக்கங்கள் உண்டாகும். -

இறைவியைத் தொழும் பழக்கம் வருவதற்குமுன், தொழுது வாழ்த்தித் தியானிப்பவர்கள் கூட்டத்தில் கலந்து பழகவேண்டும். அந்தச் சத்சங்கச் சிறப்பினல் மெல்ல மெல்லப் பக்தி உணர்ச்சி உண்டாகும். தென்ன மரத்தில் இளநீர்க் காய்க்குள் நீர் நிரம்புவதுபோல, நம்மை அறியாமல் உள்ளம் பண்படும்; பக்தியுணர்வு படியும். இந்த நிலை அரும்பு போன்றது.

அரும்பு மலர்ந்து பூவாகி டி முதிர்ந்து காயாகி, அது கனிந்து கனியாகிறது. சத்சங்கத்தில் ஈடுப்படப்பட அன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/127&oldid=546284" இலிருந்து மீள்விக்கப்பட்டது