பக்கம்:எழில் உதயம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 எழில் உதயம்

தொழில்களையும் புரியும் மும்மூர்த்திகளாகவும் தேவி விளங்குகிருள். அதனல் அவளுக்கு, த்ரிமூர்த்தி என்னும் ஒரு திருநாமம் உண்டாயிற்று.

இவ்வாறு மூன்று தொழிலேயும் செய்யும் அம்பிகை சில சமயங்களில் சிவபிரானைவிடப் பெரியவளாக இருப்பாள். சக்தி தத்துவத்துக்குப்பின் சதாசிவ தத்துவம் தோன்றும்; ஆதலின் சதாசிவத்துக்குச் சக்தி மூத்தவளாகிருள். இதை நினைந்து, .

கறைக்கண்டனுக்கு மூத்தவளே! என்கிரு.ர். பூரீகண்டனகிய சதாசிவனுக்கு அவள் மூத்த வளாம். தத்துவங்களின் தோற்ற முறையை எண்ணி இப்படி ஒரு விசித்திரமான உறவு முறையைச் சொல்வது பக்தர்களுக்கு இயல்பு. இதே முறையைக் கொண்டு அம்பிகையைச் சிவனுக்கு அன்னையென்றும் கூறுவதுண்டு. “தவளே இவள் எங்கள் சங்கர ஞர்மனை மங்கலமாம், அவளே அவர் தமக் கன்னேயு மாயினள்” (44) என்று இவ்வாசிரியர் பின்னல் பாடுகிருர்,

அம்பிகை திருமாலின் சகோதரி என்று புராணங்கள் கூறும். திருமால் என்றும் தளராத திருக்கோலம் உடை யவர். அவர் மூவா முகுந்தர். அத்தகையவருக்கு இளைய வள் என்ருல் அவளுக்கும் மூப்பு இல்லை என்று தெளிவாகிற தல்லவா? கிழத்தன்மையைப் போக்கும் அருளுடையவள் அவள். அதனல் ஜராத்வாந்தர விப்ரபா என்ற திருநாமம் அவளுக்கு வழங்குகிறது. தன்னை அண்டுபவர்களுக்கே நரை திரை மூப்பு வராமல் பாதுகாப்பவளாயின், அவளுக்கு

அவை ஏது? ... . மூவா முகுந்தற்கு இளையவளே!

எம்பெருமாட்டி சில சமயங்களில் தவக்கோலம் கொண்டிருப்பாள். பார்வதியாக அவதரித்தபோது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/136&oldid=546292" இலிருந்து மீள்விக்கப்பட்டது