பக்கம்:எழில் உதயம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாபெருந் தெய்வம் 129

பரமேசுவரனைத் திருமணம் செய்து கொள்ளும் பொருட் டுத் தவம் புரிந்தாள். அம்பிகை தவம் புரிந்தால் அது மாபெருந் தவமாகவே இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

மாத்தவளே!

முத்தொழிலையும் புரிபவளும் நீலகண்டனுக்கு மூத்த வளும் முகுந்தனுக்கு இளையவளும் மகா தபஸ்வினியு மாகிய அம்பிகையின் பெருமையைக் கூறி, 'இத்தகைய பெருமாட்டி இருக்கும்போது வேறு ஒரு தெய்வத்தைப் போய் வணங்குவதாவது!’ என்கிரு.ர்.

தேவர்களுக்கெல்லாம் முதல் தேவர்களாக இருப்ப வர்கள் பிரம்ம விஷ்ணு'ருத்திரர்கள், அவர்கள் செய்யும் தொழிலை அம்பிகை தன் ஆணையினலே நடத்தும்படி செய்கிருள். கறைக்கண்டகிைய் பரம சிவனுக்கே முன்ன வளாக இருக்கிருள். ஆதலால் வேறு தெய்வம் எதைப் பார்த்தாலும் அம்பிகைக்கு அடங்கி நிற்பது புலனுகிறது. அப்படி இருக்க, எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான தெய்வமாக உள்ள பரதேவதையாகிய அம்பிகையை வணங்கினல் எல்லாரையும் வணங்கியதன் பயனை அடைய லாம். கீழ்ப்படிகளை ஒவ்வொன்ருக ஏறி மேல். படியை அடைந்தவனுக்குக் கீழ்ப்படிகளில் கால் வைக்கும் அவசியம் இராது. அதுபோல எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான தெய்வத்தைப் பற்றிக்கொண்ட பின்னர் வேறு ஒரு தெய்வத்தை வணங்க வேண்டியது அவசியம் அல்லவே!

உன்னை அன்றி மற்ருேர் தெய்வம் வந்திப்பதே என்று கேட்கிருர் இந்த அன்பர்.

கொள்ளேன் மனத்தில்நின் கோலம்.அல் லாதன்பர்

கூட்டந்தன்னை - . . . . . . விள்ளேன் பரசமயம் விரும்பேன்’ (53);

என்று பின்னே கூறுவார்,

9نيس. فتهلكrgه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/137&oldid=546293" இலிருந்து மீள்விக்கப்பட்டது