பக்கம்:எழில் உதயம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 எழில் உதயம்

பிற தெய்வங்கள் இயற்றும் தொழில்களுக்கெல்லாம் மூலகாரணமாக நிற்பவள் பராசக்தியாதலின் அவள்பால் பக்தி செய்கிறவர்களுக்கு வேறு இடங்களே அடைத்து பெறுவது ஒன்றும் இல்லை.

பூத்தவ ளே,புவனம்பதி ஒன்கையும்

பூத்தவண்ணம்

காத்தவளே.பின் கரந்தவளே,கறைக்

கண்டனுக்கு

மூத்தவ ளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே, -

மரத்த்வ ளே.உன்னை அன்றிமற் றேர்தெய்வம்

வந்திப்பதே?

(உலகம் பதிஞன்கையும் திருவருளால் ஈன்ற பெரு மாட்டியே, அருள் கொண்டு ஈன்றது போலவே அவற்றைப் பாதுகாத்த தாயே, பின்பு அப்புவனங்களை மறைத்து வைக்கும் அம்மையே, விடக் கறுப்பைத் திருக்கழுத்திலே, உடைய சிவபிரானுக்கு முன்பு தோன்றிய தத்துவமாக உள்ளவளே, மூப்பை அடையாத திருமாலுக்குத் தங்கையே, பெரிய தவத்தை உடையவளே, அடியேன் உன்னையே தெய்வமாக வழிபடுவதை அல்லாமல் வேறு ஒரு தெய்வத்தை வழிபடுவது முறை ஆகுமா? -

பூத்தவள்-மலரச் செய்தவள்; படைத்தவள் என்றபடி. பூத்தவண்ணம் என்ற உவமை, அருள் பெருகிப் பூத்தது போலவே அருள் பெருகிக் காத்தவள் என்பதைப் புலப் படுத்தியது. கரத்தல்-மறைத்தல்; இங்கே சங்காரம். கறை-கறுப்பு: இங்கே நஞ்சால் அமைந்த கறுப்பு. தவள்தவத்தையுடைவள்; தவத்தினள் எனச் சாரியை பெற்று வரவேண்டியது செய்யுளை நோக்கிப் பெருது வந்தது. பின்பும், தவளே” (44) என்று பாடுவார். வந்திப்பதே: ஏகாரம், விஞ. வந்தித்தல்-வணங்குதல். -

அம்மையே மாபெருந் தெய்வம் என்பது கருத்து.

இது அபிராமி அத்தாதியில் பதின்மூன்றும் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/138&oldid=546294" இலிருந்து மீள்விக்கப்பட்டது