பக்கம்:எழில் உதயம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 எழில் உதயம்

அம்பிகையின் எளிமையை, அளவற்ற செளலப்யத்தை, அபிராமிபட்டர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகை யில் எண்ணிப் பார்த்து இன்புறுகிறவர். இப்போது ஒரு வகையில் அந்த எளிமையின் பெருமையைப் பாராட்டு கிருர்,

இயல்பாகவே எளிய நிலையில் உள்ளவர், எல்லாரோடும் கலந்து பழகுவதில் வியப்பு இல்லே. மிக உயர்ந்த நிலையில் உள்ளவர் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு உபகாரம் செய்து கலந்து பழகுவதுதான் சிறப்பு. ஆகவே, எளியராக ஒருவர் பழகுகிருர் என்ருல் அந்த எளிமையின் சிறப்பை அவருடைய உயர்வை எண்ணிப் பார்த்தால்தான் உணர முடியும். ஆட்டுக் குட்டி கீழே உள்ள புல்லேக் கொறிக்கும் போது அது தன் கழுத்தை வளப்பது சிறப்பாக நம் கண்ணுக்குப் புலனுவதில்லே ஆல்ை ஒட்டைச் சிவிங்கி தன் நீண்ட கழுத்தை வளைத்துப் புல்லே மேயும் போது அந்தக் கழுத்தின் வளைவு நன்ருகத் தெரிகிறது. ஒரு தென்ன மர உயரத்தில் இருக்கிற தலை வளைந்து தரையை முட்டு கிறதே, அது எவ்வளவு வியக்கத் தகுந்த காட்சி!

ஆகவே எளிமையின் பெருமை, அது யாரிடம் நிகழ் கிறதோ அவர்களுடைய உயர்வினல் மிகுகிறது. ஏழையின் வீட்டுத் துக்க நிகழ்ச்சியை விசாரிக்க உறவினர் வருவது வியப்பன்று. ஊர் அதிகாரி வந்தால் அது சிறிது வியப்பு, தாசில்தார் வந்தால் சிறிது அதிகமான வியப்பு. கலெக்டர் வந்தால் வியப்பு மிகும். கவர்னரே வந்தார் என்ருல் அது பெருவியப்பு.துக்கம் கேட்க வந்தவர்கள் கூட அதை மறந் கவர்னரைப் பார்த்துக் கொண்டே நிற்பார்கள். -

எம்பெருமாட்டியின் தண்ணளியை, உள்ளத்தையும் உயிரையும் குளிர்விக்கும் குளிர்ந்த கருணயை, சிறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/140&oldid=546296" இலிருந்து மீள்விக்கப்பட்டது