பக்கம்:எழில் உதயம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 எழில் உதயம்

அவளுக்கு அடிமையாகி, அவள் அருளை எதிர்பார்த்து வாழ்கிறவர்கள்.

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர்

ஆனவர்கள்; சிந்திப்பவர் நற்றிசைமுகர் காரணர்;

சிந்தையுள்ளே பந்திப்பவர், அழியாப் பரமானந்தர். இவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ள அன்னை எவ்வளவு எளியவளாக இருக்கிருள்! தேவலோகத்தில் தேவர்கள் தலைவரிசையையே சாலையாக வைத்து அவள் நடை போடு கிருள். பிரமாவினது சக்திய லோகத்தில் அவள் புகுந்து விட்டால் பிரமதேவர் தம் தியான மூர்த்தி வந்துவிட்டாள் என்று குழைந்து வணங்குகிருர், நாராயணரோ அவள் அருளுக்கு ஏங்கி நிற்கிருர், சிவபெருமான் அவளுடைய அந்தரங்கத்தை நாடித் தவம் கிடக்கிருர். இத்தகையவள் நிலவுலகத்தில் எவ்வளவு எளியவளாகி விட்டாள்!

சிங்காதனத்தில் அரசியாக இருப்பவள் அந்தப்புரத்தில் குழந்தைகளைத் தழுவிக் களிக்கும் தாயாக இருப்பது இயல்புதான். அது அவள் அருளேக் காட்டும் அற்புதச் செயல்.

உலகில் அப்பிராட்டிக்குக் கோயிலெடுத்துக் கும்பிடு கிரு.ர்கள்; திருவிழா நடத்துகிருர்கள்; சக்கரத்தில் ஆவாகனம் செய்து உபாசனை செய்கிருர்கள்; மந்திர தந்திர யந்திரங்களால் வழிபாடு செய்கிரு.ர்கள். அழுக்கு மயமான உடம்பு மெழுகாக உருக அன்பர்கள் அவளைத் தரிசித்து இன்புறுகிருர்கள். அவர்களிடத்தில் அவள் தன் தண்ணளி யைப் பாலிக்கிருள். தேவலோகத்திலும் சத்திய லோகத்திலும் வைகுண்டத்திலும் கைலாசத்திலும் அவள் மிடுக்காக இருக்கிருள். புழுதி படிந்த இந்த மண்ணுலகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/146&oldid=546302" இலிருந்து மீள்விக்கப்பட்டது