பக்கம்:எழில் உதயம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 எழில் உதயம்

பக்திப் பவர் அழி யாப்பர மானந்தர்;

பாரில்உன்னைச்

சந்திப் பவர்க்கு எளி தாம்எம் பிராட்டிகின்

தண்ணளியே!

(எம்பெருமாட்டியே, உன்னை வணங்குபவர்கள் தேவர் களும் அசுரர்களும் ஆகிய ஆற்றலுடைய பெரியவர்கள்; உன்னைத் தியானிப்பவர்கள் நல்லவர்களாகிய திசைமுக ராகிய பிரமாவும் நாராயணமூர்த்தியும்; தம்முடைய திருவுள்ளத்துக்குள் அன்பினலே கட்டி இன்புறுகிறவர் அழியாத பரமானந்த சொரூபியாகிய சிவபெருமான்; இவ்வளவு சிறப்புடைய உன் குளிர்ந்த அருளானது, உலகத்தில் உன்னைத் தரிசிப்பவர்களுக்கு எளிதாக இருக்கிறது. இது என்ன வியப்பு! -

வந்திப்பவர்-வணங்குபவர். தானவர்-அசுரர். திசை முகர்-பிரமதேவர். பந்திப்பவர்-கட்டுபவர். சந்திப்பவர். தரிசிப்பவர்; 'மயில்வாகனனச் சந்திக்கிலேன்' என்பது கந்தர் அலங்காரம். தண்ணளி-அருளினல் பெருகும் கொடை தண்ணளி எளிதாம். நீ இவ்வளவு அரியையாக இருந்தும் உலகில் நின்னைத் தரிசிப்பவருக்கு நின் தண்ணளி எளிதாக இருந்தது என்றபடி. . -

உன்னே வந்திப்பவர், உன்னச் சிந்திப்பவர், உன்னைப் பந்திப்பவர் என்று கூட்டுக; இடைநிலைத் தீவகம்,

உன்னைச் சிந்தையுள்ளே பந்திப்பதஞல் அழியாப் பரமானந்தராக இருக்கிருர் என்ற குறிப்பும் தோன்றியது.1

இது அபிராமி அந்தாதியில் 14-ஆம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/148&oldid=546304" இலிருந்து மீள்விக்கப்பட்டது