பக்கம்:எழில் உதயம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று செல்வம்

தேவ தானவர்களும் மும்மூர்த்திகளும் வழிபடும் பெருமாட்டியாகிய அம்பிகையின் பெருங் கருணைத் திறத்தை வியந்த அபிராமிபட்டர், அவளுடைய கருணத் திறத்தால் மக்கள் அடையும் பேற்றை இப்போது நினைத்துப் பார்க்கிரு.ர்.

இந்த உலகத்தில் சுகத்தையும் துக்கத்தையும் கலந்து அநுபவிக்கும் உயிர்கள் நன்மையையும் தீங்கையும் செப் கின்றன. முன் வினைகளின் பயனுகவே அந்த இன்ப துன்பங்களை அடைகின்றன. அது விதியின் பயன். ஆளுல் இப்போது புதிய செயல்களைச் செய்கின்றன. இவற்றின் பயனே இனி வரும் பிறவிகளில் அடையும். -

இங்கே புண்ணியச் செயல்கள் புரிந்தவர்கள் அவற்றின் பயனுக இன்பத்தை நுகர வானுலகை அடைவார்கள். தேவருலகத்தில் பெறும். இன்ப வாழ்வு இவ்வுலகத்தில் செய்த புண்ணியத்தின் பயனுக வருவது. ஆனல் அந்த வாழ்வும் புண்ணியப்பயன் தீர்ந்தவுடன் நின்றுவிடுவதே. புண்ணியத்தால் சொர்க்க இன்பத்தை அநுபவித்த நல்லுயிர் பிறகு முக்தியையோ, இவ்வுலக வாழ்வையோ அடையும், தேவலோக இன்பமே முடிவான இன்பம் அன்று. இவ்வுலக வாழ்வைப் போலவே தேவலோக வாழ்வும் நிலையாதது. இங்கே இன்பமும் துன்பமும் கலந்து வரும். அங்கே இன்பம் மாத்திரம் உண்டு. இங்கே பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பையாகிய இந்த உடலில் வாழ்கிறது உயிர்; அங்கே ஒளியையுடைய திருமேனியோடு இருக்கும். இப்படிப் பல வகையில் தேவர் பிறப்பு மனிதப் பிறப்பைவிட உயர்ந்ததே யாலுைம், அதைவிட உயர்ந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/149&oldid=546305" இலிருந்து மீள்விக்கப்பட்டது