பக்கம்:எழில் உதயம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று செல்வம் 149

வந்தது. அவர்கள் வாழும் இடம் விண்ணுலகம். அதைக் காத்து ஆட்சி புரிபவன் இந்திரன். அவன் விண் அளிக்கும் செல்வத்தையும் உரிமையையும் உடையவன். அந்த இந்திர பதவியும் இறைவியின் அருள் பெற்றவர்களுக்குக் கிடைக்கும்.

மதி வானவர் என்பதற்கு யாவரும் மதிக்கும் தேவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த இரண்டுதாமா? இந்த இரண்டையும் ஒருவாறு பெற்றுவிடலாம். ஆனல் பெறுவதற்கரியதாக இருப்பது இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்ட முத்தி என்பது. அதை முத்திச் செல்வம் என்றும் சொல்வதுண்டு.

அழியா முத்தி வீடும் அன்ருே?

என்றைக்கும் அழியாதது முத்தி; அதனைத் தமிழில் வீடு என்பார்கள். முத்தி வீட்டை அழியாதது என்றதனால் மற்றவை அழிவன என்பது குறிப்பாகப் புலனாகும். மண்ணை அளிக்கும் மன்னர் பலகோடி வந்து போயினர். அப்படியே விண்ணை அளிக்கும் இந்திரர் பலர் பதவி இழந்து மாறினர். உலக வாழ்வு சதமன்று; ஆலுைம் வாழும் வரையில் நன்ருக வாழ வேண்டும். அப்படியே சொர்க்க பதவியும் சதமன்று; ஆயினும் புண்ணியப்பயனை அங்கே சென்று வாழ்ந்து கழிக்க வேண்டும். முடிந்த முடிபாக என்றும் மாருத நிரதிசய இன்ப வாழ்வாகிய முத்தியைப் பெறவேண்டும். இதுவே மனித வாழ்வின் லட்சியம். இவை யாவும் அம்பிகையின் தண்ணளியைப் பெற்றவர்களுக்குக் கிடைக்கும். - - 'அறந்தழுவும் நெறிநின்ருேர்க் கி.கம்போகம் வீடளிக்கும்

  • - அம்மை' ... . . ." என்று மீட்ைசியம்மையைத் திருவிளையாடற் புராணம் (4:20) பாராட்டுகிறது. -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/157&oldid=546313" இலிருந்து மீள்விக்கப்பட்டது