பக்கம்:எழில் உதயம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 எழில் உதயம்

'வான் அந்த மான வடிவுடையாள்’ (11) என்று முன்னே இவ்வாசிரியர் பாடியதைப் பார்த்தோம். பஞ்ச யூதேசி என்று லலிதா சக சிரகாமம் போற்றும்.

கிளி முதல் பூதங்கள் வரைக்கும் சொல்லி அத்தனையு மாகி விளங்கும் அன்னையின் பெருமையை எண்ணிப் பார்த் தார் இப்பெரியார். தம்முடைய சிறுமையையும் நினைத்தார். "என்னுடைய அறிவு சிற்றறிவு. நீயோ உருவாகியும் உருவின்றியும் விரிந்து பரந்தவள். இவ்வளவு பெரிய நீ என்னுடைய சிற்றறிவுக்கும் அகப்பட்டு அதற்குள் நின்று என்னை ஆட்கொண்டாயே! இது என்ன அதிசயம்!” என்று வியந்து பாராட்டுகிரு.ர்.

அளியேன் அறிவு அளவிற்கு அளவானது

அதிசயமே!

என்னிடம்நீ கருணை கொண்டு, அளவுக்கு அடங்காத உன்னே என் அறிவளவுக்கு அகப்படும்படி செய்து கொண் டாய் நான் இரங்குவதற்குரியவன், அளியேன்” என்று எண்ணி அம்பிகையின் கருணைத் திறத்தை வியக்கிரு.ர்.

"அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட

அங்ங்னே பெரிய நீ சிறிய என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த -

எளிமையை என்றும்நான் மறக்கேன்' என்று கருவூர்ச்சித்தர் பாடுகிருர், அவரைப் போலவே இவரும் அம்பிகையின் பெருமையையும் எளிமையையும் வியந்து பாடுகிருர்,

பெரியவர்களுக்குத் தம்முடைய குறைகளே. மிகுதி யாகத் தோன்றும். அத்தனை குறைகள் இருந்தாலும் இறைவன் அவற்றை எண்ணுமல் தன்னுடைய இணையற்ற கருணையிஞல் ஆண்டுகொண்டான் என்று உருகுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/164&oldid=546320" இலிருந்து மீள்விக்கப்பட்டது