பக்கம்:எழில் உதயம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயமான வடிவு

வெளியாகவும் தத்துவக் கூட்டமாகவும் விரிந்த பிராட்டி திருவுருவம் கொண்டு எல்லோருடைய உள்ளத் தையும் கொள்ளே கொள்ளும் பேரழகுடன் விளங்குகிருள். அவளுடைய எழில் நிரம்பிய திருமேனியில் அழகலை புரளுகிறது. அந்தச் செளந்தரிய லஹரியிலே சொக்கிப் போகிறவர் பரமசிவனர்,

எம்பெருமாட்டியின் உருவப் பேரெழிலை எத்தனையோ கவிகள் வருணித்திருக்கிருர்கள். ஆனாலும் அதற்கு முடிவு கட்டினவர் யாரும் இல்லை. அப்பெருமாட்டியின் திருமேனி எழிலுக்கு உவமையே இல்லை. “அழகுக்கு ஒருவரும் ஒவ் வாத வல்லி' என்று பாடுவார் அபிராமிபட்டர்.

அவளுடைய வடிவு காணக் காண வியப்பைத் தருவது. உலகில் தூய அழகுடைய பொருள்களிலெல்லாம் அவளு டைய அருளின் தொடர்பு இருக்கும். வாயில்ை புகழ்ந்து அறுதியிட்டுக் காட்டும் வடிவன்று, அவள் அழகுத்திரு வுருவம். அதனைக் கண்டு கருத்திலே மொண்டு வியப்புணர்ச் சியிலே ஒன்றி நிற்பதையன்றி வேறு செயல் இல்லை.

புதிய அழகைக் கண்டால் அதிசயமாகப் பார்ப்பது மனித இயல்பு. ஆனல் எல்லா அழகையும் அடக்கி மீதுர்ந்து நிற்கும் அன்னையின் வடிவழகு அதிசயங்களில் எல்லாம் மிக்க அதிசயம். இந்த அதிசய எழிலை ஒரு வகையில் வருணித்துப் பார்க்கலாம் என்று தொடங் கினர் அபிராமிபட்டர். முதலில் பொதுவாக, 'ஆ ஆ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/166&oldid=546322" இலிருந்து மீள்விக்கப்பட்டது