பக்கம்:எழில் உதயம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 எழில் உதயம்

இத்தகைய ஞான சொரூபியான சிவபெருமான மயக்கிய பேரழகுடையவள் எம்பெருமாட்டி,

'பாகன் அகம் குழைவித்த பவித்ர பயோதரி' என்று ஒட்டக்கூத்தர் பாடுவார். இந்த ஞானமூர்த்தியின் உள்ளத்தை உருக்கினுள் அம்பிகை. மன்மதன . எரித்த ஞானக் கண்ணுடையவருடைய உள்ளத்தை மாத்திரமா கொண்டாள் பிராட்டி? அவருடைய பாதிப் பாகத்தையே வவ்விக் கொண்டாள்.

அவளுடைய அதிசய வடிவை எண்ணி, திவ்ய விக்ரஹா" (621) என்றும், இறைவர் வாமபாகத்தை வவ்வியதை எண்ணி, ‘பூரீகண்டார்த்த சரீரிணி (392) என்றும் லலிதா சகசிரகாமம் பேசுகிறது.

அம்பிகை இறைவருடைய வாமபாகத்தை வவ்வியது எப்படி? அவருடைய புத்தியை முதலில் வெற்றி கொண் டாள்; அதன் பிறகு அவர் திருமேனியில் இடப் பாகத்தில் குடியேறினுள். வெற்றி கொண்ட நாட்டில் குடியேறுவது மன்னர் வழக்கம். பலரை வென்று வெற்றி கொண்ட ஒரு பெரு வீரனை வெற்றி கொண்ட மன்னராகத் திகழ்ந்தார் இறைவர். அந்த மன்னரை வெற்றி கொண்ட மகாராணியாக, சக்கரவர்த்தினியாக விளங்குகிருள் இராஜ ராஜேசுவரியாகிய அம்பிகை.

யாவரையும் ஜயித்தவன் காமன்; அவனை ஜயித்தவர் சிவபெருமான்; அவரை ஜயித்தவள் அம்பிகை. இந்த வெற்றி அம்பினல் உண்டாகவில்லை; அன்பினால் உண்டா யிற் று. படை வகுப்பினல் உண்டாகவில்லை; பெரு வனப் பினல் உண்டாயிற்று. வன்மையால் அமையவில்லை; மென் மையால் அமைந்தது.

காமத்தை வென்ற ஞானியாகிய சிவபிரான் அருள் உருவாகிய அம்பிகையின் துாய அழகுக்கு வசமாகி ஒரு பாதியிலே வைத்துக் கொண்டார். அவருடைய மதியை வென்று வாமபாகத்திலும் குடியேறிய பேரழகி அன்னை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/170&oldid=546326" இலிருந்து மீள்விக்கப்பட்டது