பக்கம்:எழில் உதயம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 எழில் உதயம்

அம்மையின் திருவடியையே பற்றுக்கோடாகக் கொண்டு ஆணவம் நீங்கி அன்பு செய்த ஆசிரியர், இந்த வாழ்க்கையின் இறுதியிலே காலபயத்தைப் போக்கவும் அது துணை செய்ய வேண்டும் என்று வேண்டுகிருர்,

வவ்விய பாகத்து இறைவரும் நீயும்

மகிழ்ந்திருக்கும்

செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும்,

சிந்தையுள்ளே

அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும்

ஆகிவந்து

வெவ்விய காலன்என் மேல்வரும் போது

வெளிநிற்கவே.

"தாயே, நீ பற்றிக் கொண்ட வாமபாகத்தையுடைய சிவபெருமானும் நீயும் ஒன்றி மகிழ்ந்திருக்கும் நிலையில் உள்ள கோலமும், உங்கள் திருமணக் காட்சியைக் காட்டும் கோலமும், என் உள்ளத்திலே இருந்த அகந்தையைப் போக்கி ஆண்டு கொண்ட பொலிவு பெற்ற திருவடியு மாகி நீ எழுந்தருளி வந்து கொடுமையான காலன் உயி ரைக் கொள்ள என்னை நோக்கி வரும்போது கண்முன் தோன்றி அன்று அவனல் வரும் ஏதத்தைப் போக்கியருள வேண்டும்.* -

(வவ்விய-தானே விரும்பி முயன்று பெற்ற, பாகம்வாமபாகம், செவ்வி-அவசரம்; சமயம். அவ்வியம். பொருமை; இங்கே அகந்தையைக் குறித்தது. பொன்பொலிவு, ஞானப் பொலிவைக் குறித்தது; எழிற் பொலிவு என்றும் கொள்ளலாம். என்மேல் வரும்போதுஎன்னைப் பற்றுவதற்கு ஆற்றலோடு வரும்போது. வெளி நிற்க-வெளிப்படையாக வந்து நிற்பாயாக வெளிநிற்க என்ருலும். அப்படி நின்று காலனல் வரும் துன்பத்தை மாற்றவேண்டும் என்பதே கருத்து, 'அந்தப் பொல்லாத பயல் வருவான்; அப்போது சிறிதே தலையைக் காட்டி விட்டுப் போ' என்று சொல்வது போன்றது இது.)

அம்பிகையின் சரணுரவிந்தங்களைப் பற்றிக்கொண்ட வர்களுக்கு யமபயம் இல்லை என்பது கருத்து,

இது அபிராபி அந்தாதியில் 18-ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/178&oldid=546334" இலிருந்து மீள்விக்கப்பட்டது