பக்கம்:எழில் உதயம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 எழில் உதயம்

உண்முகத்தில் தியானம் செய்து பயிலவேண்டும். புறத் திலே வழிபாடு செய்யாமல் உள்ளே தியானம் செய்வது எளிதில் கைகூடாது. ஆதலால்தான் சரியை, கிரியை. யோகம் என்று படிப்படியாக வைத்திருக்கிரு.ர்கள், பிறர் பூஜை செய்வதைப் பார்த்து உருகுவது சரியை, தானே பூஜை செய்வது கிரியை, உண்முகத்திலே தியானம் செய்வது யோகம். ஒன்றுக்கு ஒன்று படியாக இருப்பது.

கண்ணிலே கண்டதைக் கருத்திலே பதிந்து அகக் கண்ணிலே கண்டு மகிழும் அநுபவத்தைத் தருபவை ஆலய வழிபாடும் பூஜையும். இந்த உண்முக அநுபவத்தைப் பெற்றவர் அபிராமிபட்டர். கண்ணுற் கண்டபோது வேறு காட்சிகள் கண்ணிற் படுவதில்லை. வேறு காட்சி களைக் கண்டால் ஒருமைப்பாடு சிதறிவிடும். ஒன்றையே கண்டு உண்முகக் காட்சியாக மாற்றும்போது, உள்ளத்தில் ஒருமைப்பாடு உண்டாகிறது. பல பல எண்ணங்களைக் கொண்டு அலைந்து கலங்கும் மனத்தில் இறைவியைத் தியானம் செய்து வந்தால் தெளிவு பிறக்கும். அப்போது உண்மை புலப்படும். தெளிவான ஞானம் மாருமல் நிற்கும், அதனுல் குழப்பமும் கவலையும் நீங்கி இன்ப வெள்ளத்தில் மிதக்கலாம். மனம் முழுவதும் அம்பிகை யின் சோதி வடிவமே நிறைந்திருக்கும்போது வேறு உணர்ச்சி புகுவதற்கு இடம் இல்லையல்லவா?

இத்தகைய அநுபவத்தை ஆசிரியர் சொல்லுகிரு.ர். வெளிகின்ற கின் திரு மேனியைப் பார்த்து

என் விழியும் நெஞ்சும் களிகின்ற வெள்ளம் கரைகண்டதில்லை. அபிராமி அம்பிகையின் திருவுருவம் வெளிப்படை யாக நாமும் தரிசிக்கும் வகையில் திருக்கோயிலில் ஒளிர் கிறது. அம்பிகையையே நேரில் கண்டாற்போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/182&oldid=546338" இலிருந்து மீள்விக்கப்பட்டது