பக்கம்:எழில் உதயம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 எழில் உதயம்

"துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்

சுருதிகளின் . பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்” என்று முன்பு வந்ததை நாம் பார்த்தோம்.

'மாசுணமோ மறைத்தலையோ மயானமோ வாக்கிறந்த தேசுணர்ந்த மெய்யடியார் சிந்தையோ திருந்தமளி' என்று அஞ்ளுவதைப் பரணியும்,

'போதத்தின் வழிநின்ருர் புந்தியோ புறங்காடோ வேதத்தின் மத்தகமோ விடவரவோ மெல்லமளி' என்று பாசவதைப் பரணியும் தேவி துயிலும் பாயலாக மறையின் தலையைக் கூறுகின்றன.

இனி நான்காவது இடத்தைச் சொல்கிரு.ர். அம்பிகை சந்திரமண்டலத்தின் நடுவிலேயிருந்து அமுத ஊற்றைப் பொங்கச் செய்கிருள் 'மதிமண்டலத் தமுதமயமாய் அம்மை தோன்றுகின்றதும்' என்று மீளுட்சியம்மை பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் பாடுகிருர். சந்த்ர மண்டல மத்யகா என்பது லலிதா சகசிரகாமம். அதைச் சொல்கிருர்.

அமுதம் கிறைகின்ற வெண் திங்களோ? சந்திரனை அமுத கிரணன் என்று சொல்வார்கள். அம்பிகை அங்கே எழுந்தருளியிருப்பதனால் அவன் அமுதம் நிறைந்தவனுன்ை.

அடுத்தபடி,

கஞ்சமோ? என்கிருர், அம்பிகை தாமரையில் வீற்றிருக்கிருள். அம்பிகை வெவ்வேறு வகையான கஞ்சங்களில் வெவ்வேறு வடிவத்தோடு வீற்றிருக்கிருள். ஆறு ஆதாரங்களிலும் ஆறு வேறு கமலங்கள் உள்ளன. அவற்றில் தேவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/190&oldid=546345" இலிருந்து மீள்விக்கப்பட்டது