பக்கம்:எழில் உதயம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் திருக்கோயில்கள் 183

வெவ்வேறு நிலையில் தன் அம்ச மூர்த்திகளை எழுந்தருளச் செய்திருக்கிருள்.

மூலாதாரத்தில் உள்ள கமலம் நான்கு இதழ்களே உடையது. அந்தக் கஞ்சமலரில் அம்பிகை வீற்றிருக்கிருள். 'மூலாதாராம்புஜாரூடா' என்று லலிதா சகசிர காமம் இதைக்குறிக்கிறது. அங்கே ஐந்து திருமுகங்களோடு வீற் றிருக்கிருள். அப்படியே ஆறு இதழ்களையுடைய ஸ்வாதிஷ் டான கமலத்தில் நான்கு முகங்களோடு விளங்குகிருள். ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா என்ற திருநாமம் தேவிக்கு உண்டு. பத்து இதழ்களே உடைய மணிபூரக கமலத்தில் மூன்று முகங்களுடன் இலங்குகிருள். 'மணிபூராப்ஜ நிலயா? என்பது லலிதா சக சிர நாமம், நான்காவது ஆதாரம் அநாஹதம். பன்னிரண்டு இதழ்களை உடைய இந்த மலரில் இரண்டு திருமுகங்களுடன் அம்பிகை கோயில் கொண்டிருக் கிருள். அதனல் அவளுக்கு அநாஹதாப்ஜ நிலயா என்ற திருநாமம் உண்டாயிற்று. அடுத்ததாகிய பதினறு தளங்களையுடைய விசுத்தி என்னும் ஆதார கமலத்தில் ஒரு முகமும் மூன்று கண்களும் உடையவளாக வீற்றிருக்கிருள், அதனல், ‘விசுத்தி சக்ரநிலயா என்ற திருநாமம் அம்பிகைக்கு உரியதாக இருக்கிறது. கடைசி ஆதாரம் ஆக்ஞை. இரண்டு இதழ்களையுடைய இந்தக் கஞ்ச மலரில் ஆறுமுகங்களுடன் எம்பிராட்டி ஒளிர்கிருள். அதனல் ஆக்ஞாசக்ராப்ஜ நிலயா என்ற அருமைத் திருநாமத்தை உடையவளாக இருக்கிருள்.

இந்த ஆறு ஆதாரங்களுக்கும் மேலே இருப்பது பிரம்ம ரந்திரம். அங்கே அம்பிகை முழுத்தேசுடன் ஆயிர இதழ்க் கமலத்தில் எழுந்தருளியிருக்கிருள். அந்த மலருக்கு ஸஹஸ்ரார பத்மம் என்று பெயர், எத்திசையிலும் உள்ள பன்முகமுடையவளாகப் பொலிகிருள் அங்கே. ஸஹஸ்ரா ராம்புஜாருடா என்றும், ஸஹஸ்ரதள பத்மஸ்த்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/191&oldid=546346" இலிருந்து மீள்விக்கப்பட்டது