பக்கம்:எழில் உதயம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 எழிழ் உதவம்

என்றும் லலிதா சகசிர நாமம் அம்மையைப் போற்றுகிறது. பொதுவாக, பத்மாஸ்ளு என்றே ஒரு திருநாமம் தேவிக்கு உண்டு. -

இந்தப்பாட்டில், வெண்திங்களோ, கஞ்ச்மோ என்று சேர்ந்து வருவதனால் வெண்மையைக் கஞ்சத்திற்கும்

கூட்டி, வெண்கஞ்சமோ என்றும் கொள்ளலாம். அம்பிகை வெள்ளைத் தாமரையில் கலைமகளாகவும் இருந்து கல்விக்குத் தெய்வமாக விளங்குவதை எண்ணிச்

சொல்லியது இது என்றும் சொல்லலாம். 'ஸரஸ்வதி' என்றே ஒரு திருநாமம் எம்பெருமாட்டிக்கு உண்டு.

அம்பிகையின் திருக்கோலங்களை ஒவ்வொன்ருகச் சொல்லிக் கொண்டே வந்த அபிராமி பட்டர், அந்த அந்தக் கோலத்தை அவ்வப்போது தியானித்துக் கொண்டே பாடினர். அவர் உள்ளம் உருகியது. வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு கோலத்தோடு இருப்பதாகத் தியானிக்கும்போது அந்த இடமும் அந்தக் கோலமும் அவருடைய உள்ளத்திலே இடம் கொள்கின்றன. அம்பிகை உறையும் இடங்களில் முக்கியமானது அன்பர் கிளின் உள்ளம் அல்லவா?

"அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர்

உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே’’

என்பது மீளுட்சியம்மை பிள்ளைத் தமிழ்.

இந்தப் பக்தருடைய நெஞ்சு நெகிழ்கிறது. 'உன்னைப் பற்றி நினைக்கவும், உன்னைத் தியானிக்கவும் எனக்கு ஒரு கருவியைக் கொடுத்திருக்கிருயே அந்த உள்ளமும் உன்னுடைய திருக்கோயில் தானே? என்று உருகினர். உடனே, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/192&oldid=546347" இலிருந்து மீள்விக்கப்பட்டது