பக்கம்:எழில் உதயம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் திருக்கோயில்கள் 185

என்றன் நெஞ்சகமோ?

என்று பாடினர், இறைவனுடைய வாம பாகம், வேதத் தின் அடி, அதன் முடி, சந்திரன், தாமரை என்று ஐந்து இடங்களைக் கூறி, ஆருவதாகத் தம் நெஞ்சத்தைச் சொன் னவர் அதோடு நிறுத்த மனம் வரவில்லை. மனத்தை அணு என்று சொல்வார்கள். இத்தகைய சிறிய இடத் தில் இருப்பவள் என்பது அவளுடைய கருணையைக் காட்டும்; பெருமையைக் காட்டாது. இதற்கு முன் சொன் னவை யாவும் உயர்ந்த இடங்கள். கடைசியில் தாழ்ந்த இடத்திலா கொண்டு வந்து நிறுத்துவது என்று எண்ணி ஞர் போலும்! ஏழாவதாக,

மறைகின்ற வாரிதியோ?

என்ருர், அம்பிகை பாற்கடலினிடையே வைஷ்ணவி சக்தியாக இருக்கிருள். பாற்கடலில் முன்பு தேவலோகப் பொருள்களெல்லாம் மறைந்து கிடந்தன. அதனல் அதனை, 'மறைகின்ற வாரிதி' என்ருர், சுதா சமுத்திரத்தினிடையே அம்மை இருப்பதாகச் சொல்வார்கள். ஆதலின் வாரிதி' என்பது அந்த அமுதக் கடலைச் சொல்வதாகவும் கொள் ளலாம். ஸாதா ஸாகர மத்யஸ்தா' என்பது தேவியின் ஆயிர நாமங்களில் ஒன்று. அம்பிகை எழுந்தருளியிருக்கும் பிந்து ஸ்தானத்துக்கே ஸ்ாதா ஸிந்து (அமுதக் கடல்) என்ற பெயர் உண்டு. அதையே குறித்ததாகவும் கொள் ளலாம்.

ஆக, ஏழு இடங்களைச் சொன்னர். இந்த ஏழு இடங் களில்தான இருக்கிருள்? அவள் இல்லாத இடமே இல்லை.

அவள், பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறை கின்ற பரிபூரணுனந்தமாக இருக்கிருள், அவளுக்குப் பூர்ணு என்றே ஒரு திருநாமம் இருக்கிறதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/193&oldid=546348" இலிருந்து மீள்விக்கப்பட்டது