பக்கம்:எழில் உதயம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் திருக்கோயில்கள் 187

நான்கு லே தங்களின் மூலமாகிய பிரணவமோ? அவற்றின் முடியாகிய உபநிஷத்துக்களோ? அமுதம் நிறைந்திருக்கும் வெண்மையான சந்திரனே? தாமரை மலரோ? அடியே னுடைய நெஞ்சாகிய இடமோ? எல்லாப் பொருளும் மறைவதற்கு இடமாகிய கடலோ?

. அதுவோ இதுவோ என்று கேட்டாலும் அந்த இடங் களில் எல்லாம் இருக்கிருய் என்பதுவே கருத்து.

திருக்கோயில், திரு-கண்டார் விரும்பும் தோற்றம்; தெய்வத்தன்மையும் ஆம். கேள்வர்-கணவர். அறை கின்ற-சொல்கின்ற, முரசு முழங்குவதுபோல முழங்குவ தாதலின் அறைகின்ற நான்மறை என்ருர், நான்மறை யின் அடியோ என்று கூட்டிப் பொருள் கொள்க. பூரணம் என்பதை அருள் நிறைவு என்றும் கொள்ளலாம; குறைவிலா நிறைவான பொருள் என்பதும் பொருந்தும். அசலம்-சலனமற்றது; மலை,]

அம்பிகை இருக்கும் இடங்கள் இவை என்று கூறியது இந்தப் பாடல், இது அபிராமி அந்தாதியில் 20-ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/195&oldid=546350" இலிருந்து மீள்விக்கப்பட்டது