பக்கம்:எழில் உதயம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவும் வண்ணமும்

"பூரணுசவ மங்கலையே! என்று விளித்து நிறுத்திய வுடன் அம்பிகையின் மங்கலமான திருவுருவம் இந்தப் பேரன்பருடைய உள்ளத்தில் தோன்றியது. அப்படியே தியானத்தில் ஈடுபட்டார். எம்பெருமாட்டியின் திருவுரு வத்திலுள்ள அங்கங்களைக் கண்டு களித்தார். தாயாக நிற்கும் பிராட்டியினிடம் ஞான அமுதை நுகரும் பிள்ளை யாக நின்ருர் அன்பர். குழந்தைக்கு அன்னையின் நகிலில் கண் போகும், அது பசித்திருப்பதனால், அப்படி ஞானதாக முடைய அன்பர் ஞான அமுது பெய்யும் தனங்களைத் தியானித்தார்.

அவள் மங்கலமுடையவள்; நித்திய சுமங்கலி; என்றும் மாருத மங்கலத்தை உடைய பிராட் டி. என்றும் சாவா மூவாப் பேராளனுகிய சிவபெருமானே நாயகனுகப் பெற்றிருத்தலின் அவளுடைய மங்கலம் என்றும் மங்காமல் இலங்குவது, அதனுல் மங்கலை என்ருர், மங்கலாக்ருதி' என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று; மங்கலமான வடிவுடையவள் என்பது பொருள். கும்பகோணத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னைக்கு மங்களாம்பிகை என்பது திருநாமம். ஸுமங்கலி என்பதும் அம்பிகையின் ஆயிர நாமங்களில் ஒன்று.

அவளுடைய நகில்கள் சிவந்த கலசத்தைப்போல உருண்டு திரண்டிருக்கின்றன. அகில லோகத்தையும் சன்றும் அவள் கன்னிகையாகவே இருத்தலின் அவளுடைய தனங்கள் வடிவு குன்ருமல் உள்ளன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/196&oldid=546351" இலிருந்து மீள்விக்கப்பட்டது