பக்கம்:எழில் உதயம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 எழில் உதயம்

'உளங்கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு

களிக்கும் கலாப மயிலே சகல கலாவல் வியே!”

என்று குமரகுருபரர் பாடுகிருர், கவிமழை உள்ளத்தே தெளிவு பெற்றவர்களிடமே உண்டாகும்.

'உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின்

வாக்கினிலே ஒளிஉண் டாகும்”

என்பார் பாரதியார்.

- சிந்தனையிலே செம்மை பெருதவன் கவி பாட இய லாது. ஆகவே அபிராமிபட்டர் தம் சிந்தையுள்ளே ஒளி உண்டாக வேண்டும் என்று வேண்டுகிரு.ர். ஒளிமயமான திருமேனியை உடையவராகிய கணபதி உள்ளத்திலே நின்முல் அபிராமி அந்தாதி ஊற்று அங்கே எழும். அந்தப் பெருநூல் உள்ளத்திலே இடையருது ஊற்றெடுக்க வேண் டும் என்று கணபதியை இறைஞ்சுகிருர். அவர் பாடிய கணபதி வணக்கச் செய்யுள் வருமாறு:

தார்.அமர் கொன்றையும் சண்பக மாலையும்

சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத் துமைமைந்த னே,உல

கேழும்பெற்ற - சீர் அபிராமி அந் தாதிஎப் போதும்என்

சிந்தையுள்ளே கார் அமர் மேனிக் கணபதி யேகிற்கக்

கட்டுரையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/20&oldid=546177" இலிருந்து மீள்விக்கப்பட்டது