பக்கம்:எழில் உதயம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 எழில் உதயம்

இதுவரைக்கும் அம்பிகையின் உருவத்தையும் நிலையை யும் சொன்ன அன்பர் அவள் வண்ணத்தைச் சொல்ல வருகிருர், வடிவைச் சொன்னவர் வண்ணத்தைச் சொல் கிருர்,

வண்ணங்கள் ஐந்து. மஞ்சள், நீலம், சிவப்பு, வெள்ளை, பச்சை என்பன அவை. அம்பிகை வெவ்வேறு கோலங் களில் இந்த ஐந்து வேறு வண்ணங்களையும் உடையவளாக ஒளிர்கிருள். -

பிங்கலே நீலி செய்யாள் வெளியாள்

பசும் பெண்கொடியே,

பிங்கலை என்பது மஞ்சள் அல்லது பொன்னிற முடையவள் என்பதைக் குறிக்கும், 'ஆயி சுந்தரி நீலி பிங்கலை","குமாரி பிங்கலை' என்று திருப்புகழில் பாடுவார் அருணகிரிநாதர். ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் ஆறிதழ்த் தாமரையில் எழுத்தருளியிருக்கும் காகினி என்னும் அம்பிகையின் திருமேனி பொன்னிறமுடையது. பீதவர்ளு' என்று லலிதா சக சிரநாமம் இந்தத் திருக்கோலத்தைக் குறிக்கிறது.

நீலி-நீல நிறமுடையவள்; நீலமும் கறுப்பும் ஒன்ருகக் கொள்வர். கருநிறக் காளியாக அம்பிகை விளங்குகிருள்: நீலி என்றது காளியை. ஆயி சுந்தரி நீலி” என்பர் அருணகிரிநாதர். "மகிடன் தலைமேல் அந்தரி நீலி” (8) என்று முன்பு இவ்வாசிரியரே பாடியுள்ளார்.

மூலதோர சக்கரத்தில் ஐந்து முகத்தோடு நான்கு இதழ்களையுடைய தாமரையில் சாகினி என்ற திருநாமத் தோடு எழுந்தருளியிருக்கும் அம்பிகை நீலவண்ணத் திருமேனியுடையவள். அந்தக் கோலத்தை நினைந்து பாராட்டியதாகவும் கொள்ளலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/200&oldid=546355" இலிருந்து மீள்விக்கப்பட்டது