பக்கம்:எழில் உதயம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவும் வண்ணமும் 193

செய்யாள் லலிதாம்பிகையின் நிறம் செம்மை. இதை முதற்பாட்டிலே, உதிக்கின்ற செங்கதிர்' முதலிய உவமைகளால் புலப்படுத்தினர்.

மணிபூரக சக்கரத்தில் பத்து இதழையுடைய தாம ரையில் மூன்று முகங்களுடன் எழுந்தருளியிருக்கும் லாகினி யென்னும் கோலத்தில் அம்பிகை செந்நிற முடையவளாக இருப்பாள். அவளை ரக்தவர்ளு என்று லலிதா சகசிரகாமம் போற்றுகிறது; அந்தக் கோலத்தை எண்ணியதாகவும் கொள்ளலாம்.

செய்யாள்’ என்பது திருமகளுக்கு ஒரு பெயர். "செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்” என்பது குறள். அம்பிகையே திருமகளாக இருந்து விளங்குகிருள் என்று சொல்வார்கள்; ஆதலின் இங்கே செய்யாள் என்பதற்குத் திருமகளாக நின்று நலம் செய்பவள் என்றும் பொருள் கொள்ளலாம்; மறைகின்ற வாரிதியோ (20) என்று முன்பாட்டில் சொன்னதையும் காண்க.

வெளியாள்-வெள்ளை நிறம் உடையவள். ஆக்ஞா சக்கரத்தில் இரண்டிதழ்க் கமலத்தில் ஆறு முகங்களுடன் எழுந்தருளிய அம்பிகைக்கு ஹாகினி என்று பெயர். அப்பெருமாட்டியின் நிறம் வெள்ளை. சுக்லவர்ணு' என்று லலிதா சகசிரகாமம் பாராட்டும். -

கலைமகள் வெண்மையான நிறம் உடையவள். 'வெள்ளை உருப்பளிங்கு போல்வாள்' என்று கம்பர் பாடியிருக்கிருர், அம்பிகையே கலைமகளாகவும் இருத்தலின், வெளியாள் என்பதற்கு வெள்ளை நிறத்துடன் நாமகளாக இருக்கும் பிராட்டி என்றும் பொருள் கொள்ளலாம். - .

பசும்பெண் கொடி பார்வதியின் நிறம் பச்சை. ஆதலின் மரகதவல்லி என்று தேவியைச் சொல்வது வழக்கம்.

எழில்-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/201&oldid=546356" இலிருந்து மீள்விக்கப்பட்டது