பக்கம்:எழில் உதயம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவும் வண்ணமும் 195

மங்கலே, செங்கல சம்முலை

யாள், மலை யாள்,வருணச் சங்கலை செங்கைச் சகல

கலாமயில், தாவுகங்கை பொங்கலை தங்கு புரிசடை

யோன்புடை ஆளுடையாள், பிங்கலே நீலிசெய் யாள் வெளி

யாள்பசும் பெண்கொடியே!

(மங்கல வடிவினளும், சிவந்த கலசம்போலப் பருத்த தனங்களை உடையவளும், மலைமகளும், பல நிற வளைகள் அசையும் சிவந்த கையைஉடையவளும், எல்லாக் கலைக்கும் நாயகியான மயில் போன்றவளும், பாய்ந்த கங்கையில் பொங்கிய அலைகள் அமைதியாகத் தங்கும் புரிந்த சடையை உடைய பரமசிவனது ஒரு பக்கத்தைத் தனக்கே உரியதாகக் கொண்டு ஆளும் உரிமை உடையவளுமாகிய அபிராமி, பொன்னிறம் உடையவள்; நீலவண்ணம் படைத் தவள்; செந்நிறமானவள்; வெண்மை நிறத்தினள்; பச்சைப் பெண் கொடி போன்றவள்.

செங்கலசம்முலையாள்: மகர ஒற்று, விரித்தல் விகாரம்; ஒசையை நோக்கி விரிந்தது.

வருணச் சங்கு.வருணன் தந்த சங்கு என்றும் சொல்லலாம்.

சடையோன் புடையாள், உடையாள் என்று பிரித் தும் பொருள் கொள்ளலாம்; சடையை உடையவனுடைய ஒரு பக்கத்தில் இருப்பவள், தல்ைவி என்று பொருள் கொள்ள வேண்டும். உடையாள் என்பது, ஸ்வாமிநி” என்ற திருநாமத்துக்குச் சரியான மொழி பெயர்ப்பு)

அம்பிகையின் வடிவத்தையும் வண்ணத்தையும் தியானித்துப் பாடியது இந்தப் பாடல். இது அபிராமி அந்தாதியில் 21-ஆம் பாட்டு. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/203&oldid=546358" இலிருந்து மீள்விக்கப்பட்டது