பக்கம்:எழில் உதயம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 எழில் உதயம்

பணிமால் இமயப் பிடியே! என்று துதிக்கிருர். குமர குருபர முனிவரும் மீளுட்சியம்மை பிள்ளைத் தமிழில்,

'வளர்சிமய

இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே’’ என்று அழைத்தார்.

மலையரசனின் புதல்வியாக வளர்ந்தது அவளுடைய எளிமையைக் காட்டுகிறது. அவளே எல்லோருக்கும் தாயாக இருக்க, ஒருவனுக்கும் ஒருத்திக்கும் மகளாக இருந்து வளர்ந்தது அதிசயம் அல்லவா? ஜனனி, மாதா, பூரீமா தா என்றெல்லாம் திருநாமங்களைப் பெற்ற அவள் பர்வதராஜனுடைய மகளாக வந்தாள். அவள் யார் யாருக்குத் தாய்? எல்லோருக்குமே தாய். பிரமன் முதல் புழுவரையில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் தாயாக விளங்குவதனால் அப்பெருமாட்டிக்கு ஆப்ரம்ஹ கிட ஜனனி என்ற திருநாமம் வந்தது. பிரமன் முதலிய தேவர் களுக்கெல்லாம் அவள் தாய். அவளே தன்னிடமிருந்து அவர்களைப் புறப்படவிட்டு, அவரவர்களுக்குரிய செயல் களைச் செய்யும் வண்ணம் ஆணையிட்டிருக்கிருள்.

பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே! என்று மேலே பாடினர்.

. "பிரமற்கும் அம்மனே’’

"பிரமனைப் பண்டு பெற்ற பெருந்திரு' என்று தக்கயாகப் பரணி அம்மையைப் பிரமனுடைய தாயாகக் கூறும். முன்னுள்ள பாடலின் உரையில் அதன் உரையாசிரியர், பிரமற்கும் அம்மனை என்ற உம்மையால் விட்டுணு புரந்தராதிகட்கும் தாயாதல் முடிந்தது என்று எழுதியிருக்கிரு.ர். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/208&oldid=546363" இலிருந்து மீள்விக்கப்பட்டது