பக்கம்:எழில் உதயம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 எழில் உதயம்

பிறப்புத் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். ஆதலின் இனிமேல் நான் பிறவாத நிலை பெறும் படியாக நீ என்பால் எழுந்தருளி என்னை ஆண்டு கொள்ள வேண்டும். ஆட்கொண்டால் அப்பால் பிறவி இல்லை என்பது உறுதி.'

பெரியவர்கள் யாவரும் கேட்டுக் கொள்ளும் பிரார்த் தனை இது.

'பிறவா திருக்க வரந்தர வேண்டும்’ என்று பட்டினத்தார் பாடினர். அபிராமிபட்டரும் அந்த வரத்தையே வேண்டுகிரு.ர்.

கொடியே, இளவஞ்சிக் கொம்பே,

எனக்குவம் பேபழுத்த படியே, மறையின் பரிமள

மே, பனி மால்இமயப் பிடியே, பிரமன் முதலாய

தேவரைப் பெற்றஅம்மே, அடியேன் இறந்திங்கு இனிப்பிற

வாமல்வந்து ஆண்டுகொள்ளே. (கொடி போன்றவளே, இளைய வஞ்சிமரத்திலுள்ள பூங்கொம்பு போன்றவளே, எனக்குப் பக்குவம் இல்லா விட்டாலும் அதனை எண்ணுமல் காலம் அல்லாத காலத்தில் பழுத்த இன்பக் கணியின் திருவுருவமே, வேதமென்னும் மலரில் பரவிய மணம் போல இருப்பவளே, பனியையுடைய பெரிய இமயமலையில் உலாவிய பிடிபோன்றவளே, பிரமன் முதலிய தேவர்களைப் பெற்ற தாயே, அடியேன் இப்போது இறந்து, அப்பால் இந்த உல்கத்தில் மீண்டும் வந்து பிறவா மல் இருக்கும்படி நீயே கருணையினுல் என்பால் எழுந்தருளி ஆளாகக் கொள்ள வேண்டும்.

வம்பு-புதுமை; வழக்கமல்லாத புதுமை. படி-உருவம்.) அம்பிகையை நோக்கிப் பிறவா வரம் தர வேண்டும் என்று கேட்கிருர் இதல்ை.

இது அபிராமி அந்தாதியில் 22-ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/210&oldid=546365" இலிருந்து மீள்விக்கப்பட்டது