பக்கம்:எழில் உதயம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமைப்பாடு

ஒருவன் தன் வீட்டின் புறக்கடையில் கிணறு வெட்ட வேண்டுமென்று எண்ணிஞன். விசாலமான புறக்கடை அது. யாரோ ஒரு பெரியவர் ஒரு மூலையில் வெட்டச் சொன்னர். பத்தடி ஆழம் வெட்டினன். அதற்குள் வேறு ஒருவர், 'அந்த இடம் வீட்டுக்கு ஆகாது; இங்கே வெட்டு' என்று சொன்னர். வீட்டுக்காரன் முன்னே வெட்டின இடத்தை விட்டுவிட்டு, இரண்டாமவர் காட்டிய இடத்தில் வெட்டினன். அங்கும் பத்து அடி வெட்டுவதற்குள், பின்னும் ஒருவர் வந்து வேறு இடத்தைக் காட்டினர். இவ்வாறு ஆறு இடங்களில் பத்துப் பத்து அடியாக வெட்டிப் பணச் செலவும் வீண் அல்லலும் உண்டாகவே, அவன் களைத்துப் போஞன்.

அதே சமயத்தில் அடுத்த வீட்டுக்காரன் ஒரே இடத்தில் முப்பது அடி வெட்டினன்; தண்ணீர் வந்து விட்டது; கிணறும் அழகாக அமைந்துவிட்டது. முன்னே சொன்னவன் ஆறு இடங்களில் வெட்டின மொத்த ஆழம் அறுபது அடி, அப்படி வெட்டியும் அவன் தண்ணிரைக் காணவில்லை. பின்னவனே அவன் பட்ட பாட்டில் பாதி யளவே பட்டான்; தண்ணிர் கிடைத்துவிட்டது. காரணம் என்ன? முன்பு சொன்னவன் தொடர்ந்து ஒரே இடத்தில் வெட்டவில்லை; மாற்றி மாற்றிப் பத்துப் பத்து அடியாக வெட்டிக் கொண்டே போனன். ஆயிரம் அடிவெட்டிலுைம் அவனுக்குத் தண்ணிர் கிடைக்காது. ஒரே இடத்தில் விடாமல் வெட்டியதால்தான் மற்றவனுக்குத் தண்ணீர் கிடைத்தது. .

எந்த முயற்சியையும் இடைவிடாமல் ஊக்கத்துடன் செய்தால்தான் நல்ல பயன் உண்டாகும். இறைவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/211&oldid=546366" இலிருந்து மீள்விக்கப்பட்டது