பக்கம்:எழில் உதயம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 எழில் உதயம்

உள்ள பொருளே, நினைப்பவருடைய உள்ளத்தே தம்மை மறக்கும்படி விளக்கும் கள்ளைப் போன்றவளே, அதனல் களிக்கின்ற களிப்பாக இருப்பவளே, இரங்குவதற்குரிய அடியேனுக்குக் கண்ணில் மணிபோல நின்று உண்மைக் காட்சியைக் காண உதவுபவளே, அடியேன் நின்னுடைய திருவுருவத்தையல்லாமல் வேறு எதையும் என் மனத்தில் தியர்னப் பொருளாகக் கொள்ளமாட்டேன்; நின் அன்பர் களின் கூட்டத்தை என்றும் பிரிந்து நிற்க மாட்டேன்; பிற சமயத்தை விரும்பேன்.

வியல்-விரிவு. மூவுலகு-அந்தர் மத்திய பாதலம். உலகுக்கும் என்ற முற்றும்மை தொக்கு நின்றது. உள்ளே என்பதும் புறம்பே என்பதும் இடவாகு பெயர்கள்.)

இந்தப் பாடலோடு திருவாசகத்தில் வரும்,

"கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு; குடிகெடினும் நள்ளேன் நினதடி யாரொடல்

லால், நர கம்பெறினும் எள்ளேன் திருவரு ளாலே

இருக்கப் பெறின்; இறைவா, உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல் வால்; எங்கள் உத்தமனே!"

என்னும் பாடல் ஒப்பு நோக்குவதற்குரியது.

ஒருமைப் பாட்டினல் இன்பம் விளையும் என்ற

கருத்தை உடையது இந்தப் பாடல்.

இது அபிராமியந்தாதியில் வரும் 23-ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/220&oldid=546375" இலிருந்து மீள்விக்கப்பட்டது