பக்கம்:எழில் உதயம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் புகல்

கினிதன் தனக்கு விருப்பமான பொருளைப் பல படி யாகப் பாராட்டுவது வழக்கம். எந்த எந்தப் பொருள்கள் அருமையாகச் சேமித்து வைக்கப் பெறுகின்றனவோ, அந்த அந்தப் பொருள்களை உவமையாகவோ, உருவக மாகவோ எடுத்து ஆள்வது அன்புக்கு அடையாளம். குழந்தையை, பொன்னே, மணியே' என்று பாராட்டிக் கொஞ்சுவது பெற்றவர்களுக்கு இயல்பு. விலை உயர்ந்த பொருளாகிய பொன்னையும் மணியையும் பெறுதற்கரிய ,பொருளாகிய மக்கட் செல்வத்தோடு ஒப்பிட்டுப் பாராட்

டுதல் பொருத்தமான செயல்தான்.

எல்லாப் பொருளுக்கும் மேலான பொருள் பரம் பொருள். தாய் இளங்குழந்தையைப் பாராட்டுவது போல், முதிர்ந்த குழந்தை தாயையும் பாராட்டலாம். ஆளுல் உலகியலில் அத்தகைய பாராட்டை நாம் கேட்ப தில்லை. எல்லா உலகுக்கும் தனித் தாயாக விளங்கும் அம்பிகையைப் பக்தர்கள் வாயாரப் பாராட்டுவார்கள். அதல்ை அப்பெருமாட்டிக்குத் தனியே ஒரு சிறப்பு உண்டாவதில்லை. ஆனல் பாராட்டும் அன்பர்களின் கருத்தில் களிப்பும், நாவில் இனிப்பும் பொங்கும்,

அபிராமிபட்டர் எம்பெருமாட்டியை வாயினல் பாடி மனத்தினல் சிந்தித்து வழிபாடு செய்வதில் சிறந்தவர். தாம் பெற்ற புலமையை அந்தப் பெருமாட்டியின் திருவடி யில் அர்ப்பணிக்கிறவர். புதிய புதிய முறையில் அன்ன யின் புகழைப் பாடவேண்டும் என்ற பேரார்வம் உடையவர். அந்த முறையில் இப்பொழுது விலை உயர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/221&oldid=546376" இலிருந்து மீள்விக்கப்பட்டது