பக்கம்:எழில் உதயம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் உதயம்

. } .

சமுதாய சோயை

விநாயகப் பெருமான வணங்கிய அபிராமிபட்டர் அபிராமி அந்தாதியைத் தொடங்குகிருர். தொடங்கும் போது அவர் தம் உள்ளத்தில் தேவியைத் தியானம் செய்கிருர், தேவியின் அங்க எழிலையும், திருவிளையாடல் களையும், அருட்பெருக்கையும், பிற பெருமைகளையும் விரிவாக நூறு பாடல்களால் பாடுவதாக எண்ணியே இந்த நூலைத் தொடங்கியிருக்கிருர் முதலில் எம்பெரு மாட்டியின் அழகுப்பிழம்பை, சமுதாய சோபையை, எண்ணிப் பார்க்கிருள். அவளுடைய திருமேனித் தேசு பொலிவு பெற்றுக் காட்சி அளிக்கிறது. சூரியோதயம் ஆகும்பொழுது கீழ்வானம் வெளுத்துப் பிறகு ஒரே ஒளிப்பரப்புத் தோன்றுமே, அப்படி உள்ளம் முழுதும் பரவிய செஞ்சோதிப் பிழம்பு தோன்றுகிறது. அபிராமி அந்தாதியின் உதயத்திலே அம்பிகையின் செம்மேனிச் சுடரும் உதயமாகிறது.

அம்பிகையின் எழிலே எப்படிச் சொல்வது? இன்ன படி உள்ளது என்று சுட்டிக்காட்ட ஒண்ணுத சோதி உருவுடையவள் அவள் . ஆலுைம் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் மீ துர்கின்றது. அதனுல் உவமைகளின் வாயிலாகச் சொல்லத் தொடங்குகிரு.ர்.

அம்பிகையின் உருவம் ஒரே சோதி மயம், முழுவதும் செவ்வண்ணச் சோதி. செம்மை என்பது நம் நாட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/23&oldid=546180" இலிருந்து மீள்விக்கப்பட்டது