பக்கம்:எழில் உதயம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 எழில் உதயம்

வேண்டும். அபிராமி என்னும் அரும் பெரு மருந்தே அந்த நோயைத் தீர்க்க வல்லது. இந்த இரகசியத்தை அடியாரைப் பின்பற்றித் திரிந்து பேணியதால் அவர் உணர்ந்து கொண்டார். அபிராமி மும்மூர்த்திகளுக்கும் மூலமாகிய பெருமாட்டி என்பதை உணர்ந்தார்.

அவள் பிறவாதவள்; எல்லோரையும் பிறக்க வைப்பவள்; மும்மூர்த்திகளையும் பெற்ற அன்னை; “மும் முதற்கும் வித்தே' என்பது மீளுட்சியம்மை பிள்ளைத்தமிழ். அவள் அதுக்கிரகம் இருந்தால் இனிப் பிறவாத நிலையைப் பெறலாம். அடிக்கிற தாய் அணைப்பது போல, நம்மைப் பிறவிப்பிணிக்கு ஆளாக்கிய அன்னை அதனினின்றும் விடுதலை பெறவும் அருளுகிருள்.

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப்

பிறப்பறுக்க -

முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன்; முதல்

மூவருக்கும்

அன்னே, உலகுக்கு அபிராமி என்னும்

அருமருந்தே!

உலகில் வாழ்கிற ஜீவர்களுக்கு நன்மை உண்டாக வேண்டும் என்ற கருணையினல் ரீராஜராஜேசுவரி அன்பர் கண்டு தரிசிக்கும் பேரழகியாக, அபிராமியாக நின்று காட்சி தருகிருள்.

அருமருந்தே என்பதற்கு அரிய அமுதமே என்றும் பொருள்கொள்ளலாம்.அமுதம் சாவாமையைத் தருவது. தன்னை நம்பிப் பணிந்த அடியார்களுக்கு மரணமிலாப் பெருவாழ்வைத் தருபவளாதலின் அமுதமாக இருக்கிருள். - மருந்தைக் கண்டுகொண்ட பிறகு சும்மா இருப் பார்களா? அதனை எப்படிப் பயன் படுத்திக் கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/238&oldid=546393" இலிருந்து மீள்விக்கப்பட்டது