பக்கம்:எழில் உதயம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 எழில் உதயம்

தூரம் நடப்பவர் காலுக்குச் செருப்புத் துணை. வெயிலில் நடப்பவருக்குக் குடை துணை ஆற்றைக் கடப்பவருக்கு ஒடம் துணை போர் புரிபவனுக்குப் படைக்கலம் துணை. சட்டி பானே வனபவர்களுக்குத் தண்ட சக்கரங் கள் துணை. இவை யாவும் ஜடப்பொருள்கள். பால் வேண்டி நிற்பாருக்குப் பசுத்துணை. இராக் காவல் வேண்டு மாளுல் நாய் துணை, நெடுந்துாரம் போகக் குதிரை துணை. இவை யாவும் உயிருடைய ஜீவன்கள். குழந் தைக்குத் தாய் துணை; தகப்பனும் துணை. மனேவிக்குக் கணவன் துணை. குடிகளுக்கு மன்னன் துணை. இவர்கள் மனிதர்கள். இந்த மூவகைத் துணைகளும் பொதுவாக மனிதனுடைய உடம்பைப் பாதுகாக்கவும் அதைக் கொண்டு நல்வாழ்வு வாழவும் உதவி புரிகின்றன.

உடம்பு, உள்ளம், உயிர் என்ற மூன்றில் ஒன்றை விட ஒன்று சிறந்தது. உள்ளத்தில் கலக்கம் வந்தாலும் அச்சம் வந்தாலும் பாதுகாத்து நலம் செய்யும் துணைவர் கள் இருக்கிருர்கள். ஆசிரியர்களும் ஞான குருக்களும் உள்ளத்துக்குத் துணையாக இருக்கிரு.ர்கள். உடம்புக்குத் துணையாக நிற்பவர்களை விட உள்ளத்துக்குத் துணையாக நிற்பவர்கள் சிறந்தவர்கள், உடம்பைவிட உள்ளம் சிறந்தது, ஆகையால். அதுபோலவே உயிருக்குத் துணை யாக யாரேனும் இருந்தால் அவர்கள் எல்லாத் துணைவர் களேயும்விட மேலானவர்கள் என்று உறுதியாகக் கூற லாம். அவர் யார்? .

நம்முடைய உயிர் உடலில் இருக்கிறது. உயிரும் உடலும் சேர்ந்தே மனிதன் ஆகிருன். உயிருள்ள உடம்பைப் பிறப்பித்தவர்கள் தாயும் தந்தையும். அவர் கள் இந்த உயிருக்குக் துணையாவார்களா என்று பார்த் தால், இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். காலன் உயிரைக் கொண்டு போகும்போது தாய் தந்தையர் அதைக் காப்பாற்ற இயலாது. ஆருயிர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/34&oldid=546191" இலிருந்து மீள்விக்கப்பட்டது