பக்கம்:எழில் உதயம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் உதயம் 27.

காதலன், ஆருயிர்க் காதலி என்று பாராட்டி அன்பு செய்யும் காதலர்களே உயிர்த்துணை என்று சொல்லலாமா? அவர்கள் வாழ்க்கைத் துணையேயன்றி உயிர்த் துணை ஆக மாட்டார்கள். காதலி தன் காதலன் உயிரைக் காப்பாற்ற முடியாது. அப்படியே காதலனும் தன் காதலி உயிரைக் காப்பாற்ற முடியாது. .

உயிர் இந்த உடம்போடு இருக்கும் போது உடன் இருந்து உணவு தந்து வளர்க்கிற தாய்த்ான் எல்லோரையும் விடச் சிறந்த அன்புடையவள். அவள் இந்த ஒரு பிறவியில் தன் அன்பைச் சொரியலாம். நமக்கு முன் அவள் இறந்தாலும், அவளுக்கு முன் நாம் இறந்: தாலும் அவளுடைய அன்பு நமக்குப் பயன்படாமல் போய்விடும். அப்படியின்றி உயிர் எங்கே சென்ருலும் எந்தப் பிறவி எடுத்தாலும் அங்கும் வந்து நமக்குத் துணை நிற்கும் யாரேனும் இருந்தால் அவளை உயிருக்குத் துணை யென்றும் மேலான துணை யென்றும் சொல்லலாம். அவள் தான் அபிராமி.

அவள் எக்காலத்தும் எல்லா இடத்தும் எல்லா உயிர்களுக்கும் தாயாக விளங்குகிருள். அவளுடைய கருணைக்கு எல்லை இல்லை. ஆருயிர்களுக்குத் தாயாக விளங்கும் இந்தப் பெருமை எல்லாவற்றையும் விடச் சிறந்தது. அதனல்தான் லலிதாம்பிகையின் நலங்களே யெல்லாம் சொல்லப் புகுந்த திருநாம வரிசைகளில் முதல் திருநாமமாக பூரீ மாதா” என்பதை லலிதா சகசிரநாமம் வைத்துப் போற்றுகிறது. நாவுக்கரசர் இறைவனை, “தொடர்ந்து நின்ற என் தாயான” என்று பாராட்டுவர்.

உயிருக்கு எக்காலத்தும் துணையாக நின்று பாது காப்பவள் அம்மையாதலால் அவளே மேலான துணையாக விளங்குகிருள். உயிருக்கு மட்டுமா துணை? உடம்புக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/35&oldid=546192" இலிருந்து மீள்விக்கப்பட்டது