பக்கம்:எழில் உதயம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 எழில் உதயம்

நமக்கு என்ன இன்னல் பலர் நல்லவர்களை இழித்துப் பேசுகிருர்கள். அன்பர் பெருமையை எண்ணுமல் வாழ் கிருர்கள். அவர்கள் பண்ணிய தீவினை, கருமம். அது அவர்களுக்கு நரகந்தான் கிடைக்கும்.

மெய்ஞ்ஞானியர்கள் எந்தச் செயலும் அவன் செயல் என்று இருப்பார்கள். அவர்களே எந்த வினையும் அட ராது. இந்தப் பிறவியில் புதியதாக வரும் ஆகாம்யம் அவர்களைச் சாராது. புண்ணிய பாவங்கள் அவர்களைச் சேர்வதில்லை.

‘. ஞானியர்கள் உடம்பு இருக்குமட்டும் நடமாடு வார்கள். அப்போது அவர்கள் இயங்குவதனுல் பிற உயிர்களுக்குத் தீங்கும் நன்மையும் உண்டாகும்படி நேரலாம், அவர்கள் பிச்சை ஏற்று உண்ணுகிருர்கள். அப்போது சிறிது உணவு கீழே சிந்துகிறது. அதை எறும்புகள் உண்ணுகின்றன. அவை உண்டதல்ை அவர்களுக்குப் புண்ணியம் சேர வேண்டும். நடக்கும் போது சில ஜந்துக்கள் காலடியில் நசுங்கிப் போகின்றன. அதன் விளைவாகப் பாவமும் அவர்களைச் சார வேண்டும். ஆல்ை, அவர்கள் மனேநாசம் ஆனவர்களாதலின் புண்ணிய பாவங்கள் அவர்களைச் சாரா.

அப்படியானல் எறும்புகள் உணவு பெற்றதன் பயணுகிய புண்ணியமும், எறும்புகள் நசுங்கியதன் பயனுகிய பாவமும் பயன்தராமல் போய்விடுமா? எந்தக் கர்மத்துக்கும் பயன் உண்டு. அது ஊட்டாமல் கழியாது. இது நியதி. அப்படியானல் இந்தப் புண்ணிய பாவங்கள் அநாமத்துக் கணக்கில் எழுப்படுவனவா?

இல்லை; அவற்றிற்கும் போக்கு உண்டு. இயல் பாகப் பிள்ளை பெறுகிறவர்களுடைய செல்வம் அப் பிள்ளைகளைச் சாரும். அவர்கள் பிள்ளை பெருவிட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/56&oldid=546213" இலிருந்து மீள்விக்கப்பட்டது