பக்கம்:எழில் உதயம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 எழில் உதயம்

எழுந்தருளியிருக்கிருள்? எத்தகையவர்களானலும் வந்து தன் திருவடிகளில் விழுந்து பணியும் வண்ணம் யாவரும் காண நிற்கிருள் அபிராமி, ஆகவே, நாம் இந்த விண்ணப் பத்தைச் சமர்ப்பிப்பதற்கு அஞ்ச வேண்டியதில்லை என்ற உறுதி பூண்டார்.

மனிதரும் தேவரும் மாயா

முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே !

என்று அம்பிகையை விளித்தார். தமக்கும் உரிமை உண்டு என்பதைப் புலப்படுத்த மனிதர்களே முன்னே வைத்தார். மிக உயர்ந்த இடத்துக்கு ஏற விரும்புகிறவன் கீழ்ப் படியிலிருந்து மெல்ல, மெல்ல ஏறுவது போலக் கீழ்ப்படி யிலுள்ள மனிதரைச் சொல்லி, பிறகு தேவரைச் சொல்லி, பிறகு முனிவரைச் சொன்னர். மனிதரும் தேவரும் மாப்பவர்கள்: பிறக்கிறவர்கள். முனிவர்களோ மாயா முனிவர், அவர்களுக்கு மாத்திரம் அம்பிகையைப் பணிந்த பயன் கிடைத்துவிட்டது. கிடைத்தும் அவர்கள் அம்மையின் சேவடியில் தம் சென்னியை வைத்து வணங்குகிருர்கள்.

- யாவருக்கும் எளியதாக உள்ள எம்பெருமாட்டியின் உள்ளம் தயை நிரம்பியது. அம்பிகையின் உருவம் மென்மை யானது; உள்ளமும் தயையினல் மென்மையானது . கோமலாகாரா, கோமலாங்கி என்பன அம்பிகையின் திரு நாமங்கள். அவ்விரண்டும் அவளுடைய மெல்லிய திரு மேனியை மட்டும் குறித்தன. இங்கே அகமும் புறமும் மென்மையானவள் என்று புலப்படுத்த வந்த ஆசிரியர், கோமளமே” என்று பாராட்டினர். கோமளம் மென்மை; அதை உள்ளும் புறமும் உடையவளாதலின் இவ்வாறு விளித்தார். -

நீ என்னுடைய புத்தியில் எப்போதும் வந்து குடி யிருக்க வேண்டும் : என்று வேண்டிக் கொள்கிருர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/62&oldid=546219" இலிருந்து மீள்விக்கப்பட்டது