பக்கம்:எழில் உதயம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 எழில் உதயம்

பராகாசா என்பது லலிதா சகசிரநாமத்தில் ஒரு நாமம், சிதாகாசத்தில் உறைபவளாதலின் அந்தரி என்ற பெயர் கொண்டாள் என்றும் கூறலாம். இதயத்தினூடே உள்ள நுட்ப வெளியாகிய தசர்ாகாச உருவினளாக உறை கின்றவள் என்றும் அதற்குப் பொருள் கூறலாம். தகராகாச ரூபிணி' என்பது அன்னையின் ஆயிரம் திரு நாமங்களில் ஒன்று. -

இத்தகைய பெருமாட்டியின் திருவடி என் தலை மேல் இருக்கிறது’ என்று சொல்லுகிருர் அபிராமிபட்டர்.

பொருந்திய முப்புரை, செப்புரை

செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல்

மகுேன்மணி, வார்சடையோன் அருந்திய நஞ்சமு தாக்கிய

அம்பிகை, அம்புயமேல் திருந்திய சுந்தரி, அந்தரி

பாதம்என் சென்னியதே. (சேர்ந்து பொருந்திய திரிபுரத்தின் தலைவி, செப்பை உவமையாகச் சொல்லும் இரண்டு தனங்களின் பாரத் தால் வருந்திய வஞ்சிக்கொடியைப் போன்ற இடையை யுடைய மினேன்மனி, நீண்ட சடையை உடைய சிவபெரு மான் அருத்திய ஆலகால நஞ்சைத் தன் கையால் கழுத் தளவில் நிற்கச்செய்து அமுதம்போல ஆக்கிய தாய், தாமரையின்மேல் அழகுபெற வீற்றிருந்தருளும் பேரழகி, பராகாச வடிவினன்-ஆகிய அபிராமியின் திருவடி என்

தலையின்மேல் உள்ளது.) . - . . . . ~~

திருவடிகள் இரண்டாயினும் ஒன்ருக் வைத்துச் சென்னியது என்ருர், . -

. எம்பெருமாட்டியின் அடியைப் பணிந்து வாழ்வேன் என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/72&oldid=546229" இலிருந்து மீள்விக்கப்பட்டது