பக்கம்:எழில் உதயம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழியாத கன்னிகை

அடியையும் ஆனனத்தையும் தியானித்து அபிராம வல்லியின் பேரழகிலே உள்ளத்தைப் பறிகொடுத்த ஆசிரிய ருக்கு, அப்பெருமாட்டியின் திருவருள் வல்லபத்தால் தம்மு டைய அறியாமை நீங்கியது நினைவுக்கு வருகிறது. தன்னை நம்புகிறவர்களுக்கு அருள் செய்ய முன்வரும் அன்னையின் பரங்கருணையை எண்ணி இன்புறுகிரு.ர்.

அவள் கண்ணையும் கருத்தையும் கவரும் பேரழகி. அந்த அழகை துகரும் ஒருவன் இருக்கிருன். அவன் தான் நம்மு டைய தந்தையாகிய பரமசிவன். அவனுக்குத் துணைவி யாக நின்று அவனுக்கே புகழை உண்டாக்குகிற பெருமாட்டி அவள்; ஆண் எப்படியிருந்தாலும் அழகியாக ஒரு மனைவி அருகில் உடன் வந்தால் அவளால் அவனுக்குப் பெருமை உண்டாகிறது. அப்படி இந்தச் சுந்தரியைச் சிவபெருமான் தன்துணவியாகக் கொண்டு பெருமையை அடைகிரு.ர்.

சுந்தரி, எங்தை துணைவி.

மனையாட்டி என்று சொல்லாமல் துணைவி என்ருர். இறைவன் அவளுடைய துணையில்ை தருக்கோடு விளங்கு கின்றன். ஆதலின் அவ்வாறு சொன்னர். "பானை பிடித்தவள் பாக்கியம்’ என்று பாராட்டுவது உலக இயல்பல்லவா? - -

எந்தைக்கே துணையாக இருந்து நலம் செய்யும் பெருமாட்டி, தன்னை நம்பிய குழந்தைகளின் துன்பத் தைப் போக்குகிருள். அவளுடன் ஒன்றி அருளின்பம் பெருமல், பாசத்தால் கட்டுண்டு கிடக்கிறர்கள் ஜீவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/88&oldid=546245" இலிருந்து மீள்விக்கப்பட்டது