பக்கம்:எழில் உதயம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 எழில் உதயம்

சிந்துர வண்ணத்தினுள்

என்கிருர், திரிபுரசுந்தரி செய்ய திருமேனியுடையவள் என்பதை முதற் பாட்டிலேயே நினைப்பூட்டிக்கொண்டு புக் கவர் அல்லவா?

"என் பாசத்தொடரை அரிந்தவள் என்று சொல்கி ருரே; இந்த அருள் அவரளவிலே நின்ற தனியுரிமையோ?” என்ற ஐயம் எழும். அதைப் போக்குபவரைப்போல உலகம் அறிந்த அவள் பராக்கிரமச் செயலைச் சொல்ல வருகிரு.ர். மகிஷாசுரனது தலையின்மேல் திருவடியை வைத்து நிற்கும் அந்தரி” என்று கூறுகிருர் எம்பெருமாட்டி மகிஷாசுர மர்த்தனி; தாமத குணத்தின் அடையாளமான எருமையுருப் பெற்ற அசுரனை மாய்த்த துர்க்கை அவள். பசுக்களே அஞ்ஞானக் குழியில் அழுந்தச் செய்வது தாமத குணம்; அதனை மாய்க்கும் அருளுடையாள் அன்னை என்பதே மகிஷாசுர சங்காரக் கதையின் கருத்து. என் பாசத்தை நீக்குவது மட்டுமன்று; உலகத்தில் எல்லா ஜீவர்களுடைய அறியாமையையும் போக்கும் பெருமாட்டி அவள். மகிஷாசுர சங்காரத்தின் கருத்து அதுதானே? என்று குறிப்பாகச் சொல்பவரைப்போல,

என் பாசத் தொடரை எல்லாம் - வந்தரி சிந்துர வண்ணத்தினுள், மகிடன் தலைமேல் அந்தரி

என்று இரண்டையும் அடுத்தடுத்து வைத்தார்.

மகிடன் தலைமேல் நின்ற கோலத்தில் அம்பிகை துர்க்கை என்றும் சாமுண்டி என்றும் வழங்கப்பெறுவாள்.

“ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்ருயால்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/90&oldid=546247" இலிருந்து மீள்விக்கப்பட்டது