பக்கம்:எழில் உதயம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோலக் காட்சி 9i

கருத்தன, எங்தைதன் கண்ணன. வண்ணக் கனகவெற்பிற் பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு

கல்கின, பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும்

செங்கைச் சிலையும் அம்பும் முருத்தன மூரலும் யுேம் அம் - மே, வந்தென் முன்கிற்கவே. (தாயே, எம் தந்தையாராகிய சிவபெருமானது திருவுள்ளத்தில் இருப்பனவும், திருவிழிகளில் உள்ளனவும், அழகு பெற்ற பொன்மலையாகிய மேருவைப்போலப் பருத் திருப்பனவும், அழுத திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குப் பாலை வழங்கினவும் ஆகிய பெரிய திருவருள் மிகுந்த அழகிய திருத்தன பாரமும், அவற்றின்மேல் உள்ள முத்து மாலையும், சிவந்த திருக்கரத்திலுள்ள கரும்பு வில்லும் மலர்ம்புகளும், மயிலிறகின் அடிக் குருத்துப் போன்ற புன்னகையும், தேவியாகிய நின் பூரணத் திருக்கோலமும் என்முன் நின்று காட்சி அருளுக.

கருத்தன என்பது சிவபெருமான் நினைவில் உள்ளன என்பதையும், கண்ணன என்பது அவனுடைய பார்வை யைப் பெறுவன என்பதையும் குறித்தன. எந்தைதன் கருத்தன, எந்தைதன் கண்ணன் என்று கூட்டவேண்டும்; இடைநிலை விளக்கு. வெற்பின்-வெற்பைப்போல. ஊட் டாமல் கிண்ணத்தில் கறந்து அருத்தினமையின், நல்கின என்ருர். கருத்தன, கண்ணன, பெருத்தன, நல்கின ஆகிய திருத்தனபாரம். ஆரம்-முத்து மாலை, சிலை-வில். எதுகை நோக்கி முருந்து என்பது முருத்து என வந்தது.1

நின்னுடைய திருக்கோலக் காட்சியைக் காட்டியருள வேண்டும் என்பது கருத்து.

இது அபிராமி அந்தாதியில் ஒன்பதாவது பாட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/99&oldid=546256" இலிருந்து மீள்விக்கப்பட்டது